- முகப்பு
- மாவட்டச் செய்தி
- பாபநாசம் அருகே ஊர் பொது குளத்தில் கொத்துக்கொத்தாக செத்து மிதந்த ஏராளமான மீன்கள்.
பாபநாசம் அருகே ஊர் பொது குளத்தில் கொத்துக்கொத்தாக செத்து மிதந்த ஏராளமான மீன்கள்.
ஆர்.தீனதயாளன்
UPDATED: May 3, 2024, 9:28:13 AM
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் உள்ள புளியம்பாடி கிராமத்தில் வசிப்பவர் சுரேந்திரன் (42), மனைவி கவிதா (37). இவர்களுக்கு ரக்ஸிதா (12), ராகுல் (8) என்ற இரண்டு பிள்ளைகள் இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் சுரேந்திரன் புளியம்பாடி மேலதெருவில் அமைந்துள்ள ஊர் பொதுக்குளமான கருப்பையா குளத்தை கடந்த ஆண்டு, ஏலங்கள் எடுத்து அதில் மீன்களை வளர்த்து வந்துள்ளார்.
இந்த நிலையில் சுரேந்திரன் மற்றும் அவர்கள் குடும்பத்தார்கள் குளத்தை பார்வையிட்ட போது, ஏராளமான மீன்கள் செத்து மிதப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக கபிஸ்தலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வரைந்து வந்த கபிஸ்தலம் போலீசார் குளத்தின் நீரை எடுத்து ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர்.
மேலும் இது சமூக விரோதிகளின் செயலா அல்லது வெயிலின் தாக்கமா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குளத்தில் மீன்கள் கொத்து கொத்தாக செத்து மிதந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்பட்டு உள்ளது.
மேலும் மீன் வளர்ப்பில் ஈடுபட்டு வந்த குடும்பத்தினர் கதறி அழுதது காண்போரை கண் கலங்க வைத்தது. தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து கொண்டிருந்த போது, சுரேந்திரன் மனைவி கவிதா மயக்கம் இட்டு கீழே விழுந்தார்.
அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தண்ணீர் தெளித்து மயக்க நிலையில் இருந்து மீட்டெடுத்து வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.