• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • சேத்தியாத்தோப்பு காவல் நிலையம் முன்பு தள்ளுமுள்ளு ஏற்பட்டு இரண்டு தரப்பினர் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு.

சேத்தியாத்தோப்பு காவல் நிலையம் முன்பு தள்ளுமுள்ளு ஏற்பட்டு இரண்டு தரப்பினர் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு.

சண்முகம்

UPDATED: May 15, 2024, 5:40:57 AM

Latest District News

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு காவல் நிலையம் முன்பு அருகில் உள்ள ஊர்களைச் சேர்ந்த இரண்டு தரப்பினர் நீண்ட நேரமாக கூட்டமாக நின்றிருந்தனர். 

அவர்கள் தங்கள் குடும்ப பிரச்சனை காரணமாக காவல் நிலையத்தில் ஏற்கனவே புகார் அளிக்கப்பட்டதன் பேரில் காவல்துறையினர் இரண்டு தரப்பினரயும் காவல் நிலையம் வரவைத்து விசாரித்துக் கொண்டிருந்தனர்.

District News

அப்போது காவல் நிலையம் முன்பு நின்றிருந்த சுமார் 50க்கும் மேற்பட்ட நபர்கள் திடீரென அவர்களுக்குள் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் தாக்கிக் கொண்டனர்.

அதில் ஒரு தரப்பினர் காவல் நிலைய வாசலில் தரையில் அமர்ந்து தர்ணா செய்ய முடிந்தனர். அப்போது உள்ளே இருந்து வந்த காவல்துறையினர் அவர்களை உள்ளே அலேக்காக தூக்கி சென்றனர்.

Cuddalore District News

cuddalore news today liveசேத்தியாத்தோப்பு காவல் நிலையம் முன்பு தள்ளுமுள்ளு ஏற்பட்டு இரண்டு தரப்பினர் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு

இருந்தாலும் காவல் நிலைய வாசல் முன்பு கூட்டம் குறையாமல் கும்பலாக இருக்கவே அங்கே வந்த காவல் துறையினர் திடீரென தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். 

புகார் கொடுக்கப்பட்டதற்கு காவல்துறையினர் விசாரித்துக் கொண்டிருக்கும் போதே காவல் நிலைய வாசலிலேயே இரண்டு தரப்பினர் தாக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது.

Online District News

இதுகுறித்து பலரும் தெரிவிக்கையில் கொடுக்கப்பட்ட புகாரை சரியாகவும், விரைவாகவும் விசாரித்து நடவடிக்கை எடுக்க முயற்சிகளை எடுத்து இருந்தால் இது பன்ற சம்பவமே நடந்திருக்காது எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்த காட்சிகளை அவ்வழியாக சென்ற பலர் நின்று வேடிக்கையும் பார்த்தனர். இந்த சம்பவத்தை வீடியோவாகவும் எடுத்து வெளியிட்டுள்ளனர் .

 

  • 1

VIDEOS

Recommended