17 ராமேஸ்வரம் மீனவர்களை விடுவிக்க ராமநாதபுரம் எம்.எல். ஏ. ரூ. 2-1/2 லட்சம் அபராதத்தை செலுத்தினார்.

கார்மேகம்

UPDATED: Oct 11, 2024, 9:29:15 AM

இராமநாதபுரம்

இலங்கை சிறையில் இருந்து 17 ராமேஸ்வரம் மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர் 

இவர்களுக்கான அபராத தொகை ரூ.2-1/2 லட்சத்தை மீனவர்கள் சார்பில் ராமநாதபுரம் தொகுதி எம்.எல். ஏ. காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் செலுத்தினார் 

( ராமேஸ்வரம் மீனவர்கள்)

ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த மாதம் 29 ந் தேதி 2 விசைப் படகுகளில் 17 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர் இந்த மீனவர்களை எல்லை தாண்டி வந்து மீன் பிடித்தாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து வவுனியா சிறையில் அடைத்தனர்

இந்த நிலையில் 17 பேரும் நேற்று இலங்கையின் மன்னார் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

( அபராதம்)

வழக்கை விசாரித்த நீதிபதி ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேருக்கும் இலங்கை பணம் ரூ. 50 ஆயிரம் அபராதமாக விதித்தார்

மேலும் இந்த தொகையை கட்ட தவறினால் 6 மாத சிறை தண்டனை விதித்தும் தீர்ப்பளித்தார் உடனடியாக மீனவர்களால் அபராத தொகை செலுத்த இயலாத நிலையில் 17 மீனவர்களும் மீண்டும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர் 

( எம். எல். ஏ. செலுத்தினார் )

இதுபற்றி தகவல் தெரியவந்ததும் மீனவர்களை விடுவிக்க உதவுமாறு ராமநாதபுரம் தொகுதி எம்.எல்.ஏ. காதர் பாட்ஷா முத்துராமலிங்கத்திடம் உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர் 

இதைத்தொடர்ந்து அவர் தனது சொந்த பணம் இந்திய மதிப்பில் ரூ.2-1/2 லட்சத்தை அனுப்பி வைத்து அபராதத்தை செலுத்த ஏற்பாடு செய்ததை தொடர்ந்து 17 மீனவர்களும் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு இந்திய தூதரக அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்பட்ட தாக தகவல் வெளியாகி உள்ளது. 

 

VIDEOS

Recommended