நாகை அரசு நியாய விலை கடையில் சிறுவனை வைத்து பொருட்கள் வழங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்
செ.சீனிவாசன்
UPDATED: Apr 24, 2024, 12:46:38 PM
தமிழக முழுவதும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஆண்டுத் தேர்வு நிறைவடைந்து கோடை விடுமுறை நேற்று விடப்பட்ட நிலையில் நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தாலுக்கா செருநல்லூர் ஊராட்சியில் அமைந்துள்ள நியாய விலை கடையில் சிறுவன் அரிசி பருப்பு, சீனி உள்ளிட்ட பொருட்களை எடை வைத்து விநியோகம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது
18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்களை வேலைக்கு அமர்த்த கூடாது என்ற சட்டம் நடைமுறையில் உள்ளது இந்த நிலையில் பொது விநியோகம் சட்டத்தின் மூலம் செயல்படும் அரசு நியாய விலை கடையில் பொருட்களை எடை வைத்து விநியோகம் செய்யும் சிறுவன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவதற்கு பொதுமக்கள் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்
குறிப்பாக அரசு துறையிலேயே இது போன்ற தவறுகள் அரங்கேறுவது வேதனை அளிப்பதாக தெரிவிக்கும் பொதுமக்கள் அரசு நியாய விலை கடை உரிமையாளர் குழந்தை தொழிலாளரை பணிக்கு அமர்த்தியுள்ளாரா..? என்பதை ஆய்வு செய்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.