நாகர்கோயிலில் கஞ்சா பதுக்கிய இருவர்

முகேஷ்

UPDATED: Apr 23, 2024, 7:47:30 PM

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் பகுதியில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது 

அதன் பெயரில் போலீசார் அந்த பகுதியில் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர் இதில் ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது

இதனைத் தொடர்ந்து போலீசார் அங்கு அதிரடி சோதனைகளில் ஈடுபட்டனர் அந்த வீட்டிலிருந்து ஆறு ( 6 )கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இது தொடர்பாக இருளப்பபுரம் பகுதியை சேர்ந்த முகமது இம்ரான் (20) , வேதநகர் பகுதியை சேர்ந்த நிகால் (24) ஆகிய இரண்டு பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்,

மேலும் இதில் தொடர்புடைய நபர்களை தனிப்படை போலீசார் சல்லடை போட்டு தேடி வருகின்றனர்.

 

  • 2

VIDEOS

Recommended