• முகப்பு
  • குற்றம்
  • மூதாட்டி தவறவிட்ட 12 சவரன் தங்க நகையை ஆட்டைய போட்ட ஆட்டோ ஓட்டுனர்.

மூதாட்டி தவறவிட்ட 12 சவரன் தங்க நகையை ஆட்டைய போட்ட ஆட்டோ ஓட்டுனர்.

நெல்சன் கென்னடி

UPDATED: May 16, 2024, 10:20:52 AM

 Latest and Breaking Chennai News 

சென்னை மண்ணடி பகுதியை சேர்ந்த 64 வயதான மார்கிரேட் என்ற மூதாட்டியும் அவரது உறவினரும் கடந்த 5ம் தேதி அன்று (05.05.2024) சென்னை சோழிங்கநல்லூர், கங்கையம்மன் கோயில் தெருவில் உள்ள அவரது மகள் வீட்டிற்கு வந்துள்ளனர். 

சென்னை பாரிமுனையில் இருந்து அரசு பேருந்தில் வந்த இருவரும் சென்னை சோழிங்கநல்லூர் பொண்ணியம்மன் கோயில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கியதும் மகள் வீட்டிற்கு செல்ல அந்த வழியாக வந்த ஒரு ஆட்டோவை பார்த்து கை போட்டதும் அருகில் போக வேண்டும் என்று மூதாட்டி கூறியதும் ஆட்டோ ஓட்டுனர் சரி என்று இருவரையும் அவரது ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு பயணித்துள்ளார். 

Breaking Chennai News

பின்னர் சிறிது நேரத்தில் மகள் வீட்டிற்கு ஆட்டோவில் பயணித்த மார்கிரேட் என்ற மூதாட்டி லேப்டாப் பையில் மகள் வீட்டிற்கு எடுத்து வந்த 11 சவரன் தங்க நகையை பையுடன் மறந்து ஆட்டோவில் வைத்துவிட்டு இறங்கி சென்றுள்ளனர். 

மகள் வீட்டிற்கு சென்றதும் அவரது வீட்டில் இருந்து எடுத்து வந்த நகையை தேடும்போது தான் மறந்து ஆட்டோவில் தவற விட்டதாக உணர்ந்துள்ளனர். 

Latest Chennai News

ஆட்டோவை எந்த செயலி மூலமும் அழைக்காமல் சாலையில் வந்த ஆட்டோவை நேரடியாக கை போட்டு ஏறி சென்றதால் ஆட்டோவின் பதிவு எண் மற்றும் ஆட்டோ ஓட்டுநரின் விவரம் என எதுவும் தெரியாததால் மூதாட்டி பெரும் சோகத்தில் இருந்தார். 

பின்னர் இதுகுறித்து எந்த ஒரு விவரமும் இல்லாமல் செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு ஆய்வாளர் பிரபுவிடம் மூதாட்டி புகார் அளித்தார். 

Latest Chennai News Headlines 

புகாரின் அடிப்படையில் ஆய்வாளர் பிரபு தலைமையில் உதவி ஆய்வாளர் ராஜு, தலைமை காவலர் யாசர் அரபாத், முதல்நிலை காவலர் நித்தியானந்தம், இரண்டாம்நிலை காவலர் ரவி உள்ளிட்டோர் அடங்கிய ஒரு தனிப்படை அமைத்து ஆட்டோ யாருடையது. ? ஓட்டுநர் யார். ? என்ற விவரங்களை சேகரிக்க சம்பவ இடத்தை சுற்றியுள்ள சுமார் 30 க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். 

அதில் ஒரு ஆட்டோ மட்டும் அதிவேகமாக சென்றதால் அதன் பதிவு எண் கிடைப்பது சவாலாகவே இருந்துள்ளது பின்னர் ஒரு வழியாக கடந்த 10 நாட்களாக போராடி ஆட்டோவின் பதிவு எண்ணை கண்டுவிப்பிடித்து அதன் அடிப்படையில் சென்னை கண்ணகி நகர் பகுதி, எழில் நகரை சேர்ந்த 67 வயதான பாண்டியன் என்பவரை போலீஸ்சார் கைது செய்தனர். 

Chennai Latest News

பின்னர் அவரை காவல் நிலையத்தில் வைத்து விசாரித்தபோது, ஒப்பு கொண்டார் ஆட்டோவில் பயணித்தவர்கள் தவறவிட்ட பையை திறந்து பார்த்தேன் அதில் தங்க நகை இருந்தது, அதை நேர்மையாக திருப்பி கொடுக்கலாம் என்று பார்த்தேன். ஆனால் என்னுடைய வறுமை, கடன் தொல்லை காரணமாக அதை திருப்பி தராமல் நானே எடுத்துக் சென்றுவிட்டேன். 

மேலும் வயதான மனைவியின் மருத்துவ செல்விற்கு பணம் தேவைப்பட்டதாலும், இரண்டு மாதம் வீட்டு வாடகை கட்டாமல் உள்ளதாகவும் , மூன்று மாதம் ஆட்டோ தவணை கட்டாமல் உள்ள தாகவும் ஆட்டோவில் தவற விட்ட நகையை நான் எடுத்து சென்று அடகு கடையில் வைத்து என்னுடைய செலவுகளை முடித்துக் கொண்டேன் என்று கூறியுள்ளார். 

Chennai News

அதை தொடர்ந்து ஆட்டோ ஓட்டுநர் பாண்டியன் அடகு வைத்ததாக கூறப்பட்ட கடைக்கு சென்ற போலீசார் ஆட்டோவில் மூதாட்டி தவறவிட்ட 12 சவரன் தங்க நகையை பறிமுதல் செய்தனர். 

பின்னர் ஆட்டோ ஓட்டுநர் பாண்டியன் மீது வழக்கு பதிவு செய்த செம்மஞ்சேரி குற்றப்பிரிவு போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Today Chennai News

பல்வேறு இடங்களில் ஆட்டோவில் பயணிகள் தவறவிட்ட நகைகளை ஆட்டோ ஓட்டுநர்கள் நேர்மையாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்து வந்ததை பார்த்துள்ளோம் ஆனால் இந்த ஆட்டோ ஓட்டுநர் குடும்ப சூழ்நிலை காரணமாக தங்க நகைகளை அபகரித்து ஆட்டைய போட்ட சம்பவம் சக ஓட்டுநர்களுக்கு இடையே பெரும் அவப்பெயரை உண்டாக்கி உள்ளது  

Chennai News In Tamil

எந்த ஒரு விவரமும் இல்லாமல் தவறவிட்ட12 சவரன் தங்க நகையை 10 நாட்கள் போராடி தவறவிட்ட நகைகளை மீட்டு கொடுத்த ஆய்வாளர் பிரபு தலைமையிலான உதவி ஆய்வாளர் ராஜு, தலைமை காவலர் யாசர் அரபாத், முதல்நிலை காவலர் நித்தியானந்தம், இரண்டாம்நிலை காவலர் ரவி உள்ளிட்டோர் தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் வெகுவாக பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

 

VIDEOS

Recommended