• முகப்பு
  • குற்றம்
  • திருப்புல்லாணி கோவிலில் ரூ. 1. கோடி  நகைகள் மாயம் நகை பொறுப்பாளர் சீனிவாச அய்யங்கார் முன்ஜாமின் மனு மீண்டும் தள்ளுபடி.

திருப்புல்லாணி கோவிலில் ரூ. 1. கோடி  நகைகள் மாயம் நகை பொறுப்பாளர் சீனிவாச அய்யங்கார் முன்ஜாமின் மனு மீண்டும் தள்ளுபடி.

கார்மேகம்

UPDATED: May 1, 2024, 9:19:43 AM

இராமநாதபுரம் அருகே உள்ள திருப்புல்லாணி ஆதிஜெகதாதப்பெருமாள் கோவிலுக்கு சொந்தமான ரூ. 1. கோடி மதிபிலான‌ நகைகள் மாயமானது

ஆதிஜெகநாதப்பெருமாள் மற்றும் பத்மாஷனி தாயாருக்கு அணிவிப்பதற்காக உள்ள‌ மொத்த‌ நகைகளில் 952. கிராம் எடை உள்ள 30 தங்க நகைகள் 1199 கிராம் எடையுள்ள 16 வெள்ளி நகைகளும் மாயமாகியது.

இது தொடர்பாக திவான் பழனிவேல் பாண்டியன் அளித்த புகாரின் பேரில் ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ்சார் நகை பொறுப்பாளர் கோவில்  ஸ்தானிகர் சீனிவாச அய்யங்கார் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

இந்த சம்பவம் தொடர்பாக கோவில் ஸ்தானிகரிடமும் அந்த காலகட்டத்தில் பணியாற்றிய பணியாளர்கள் ராமு. பாண்டி‌ சாமித்துரை மற்றும் முன்னால் திவான் மகேந்திரனிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இந்த மோசடி வழக்கு தொடர்பாக சீனிவாச அய்யங்கார் மாவட்ட கோர்ட்டில் ஏற்கனவே தாக்கல் செய்த முன்ஜாமின் மனு தள்ளுபடியானது

இந்த நிலையில் 2 வது முறையாக மனு தாக்கல் செய்த நிலையில் அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது 

விசாரணையின் போது அரசு வக்கில் கார்த்கிகேயன் இந்த வழக்கு விசாரணை ஆரம்ப நிலையில் உள்ளது இதுவரை மாயமான நகைகள் கைப்பற்றப்படவில்லை

பலரை விசாரிக்க வேண்டி உள்ளதாலும்  பலரை வழக்கில் சேர்க்க வேண்டி உள்ளதாலும் முன்ஜாமின்‌‌ வழங்கினால் விசாரணை பாதிக்கப்படும் என கடும் எதிர்ப்பு தெரிவித்தார்

திவான் பழனிவேல் பாண்டியன் தரப்பில் ஆஜரான வக்கீல் அருண் கண்ணனும் முன்ஜாமின் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவித்தார்

இதையடுத்து நீதிபதி குமரகுரு சீனிவாச அய்யங்காரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 

 

  • 6

VIDEOS

Recommended