அடகு நகையை மோசடி செய்தவர் தலைமறைவு

கார்மேகம்

UPDATED: Jun 29, 2024, 7:37:01 PM

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் 2012- ம் ஆண்டு நியூ செல்வி கோல்ட் பைனான்ஸ் என்கிற நிறுவனம் செயல்பட்டு வந்ததாகவும் அந்த நிறுவனத்தில் 300 -‌ க்கும்‌ மேற்பட்டவர்கள் நகை அடகு வைத்துள்ளனர்

நகையை அடகு வாங்கிய நியூ செல்வி‌ கோல்ட் லோன் பைனான்ஸ் நிறுவனம் நகையை திருப்பிக் கொடுக்காமல் மோசடி செய்துள்ளனர் என்றும் அத்துடன் அந்த நிறுவனத்தையும் இரவோடு இரவாக பூட்டிவிட்டு தலைமறைவாகினர் என்றும் நகையை இழந்தவர்கள் இது குறித்து அப்போது திருப்புல்லாணி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.

ஆனால் இழந்த நகையை மீட்டுக்கொடுக்க போலீஸ் சார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது இது சம்பந்தமாக சென்ற 28/06/ 2024- ல் மாவட்ட ஆட்சியர் நடத்திய சிறப்பு குறைதீர் கூட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள்‌ புகார் மனு அளித்துள்ளனர் அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது 

கடந்த 2012- ம் ஆண்டு திருப்புல்லாணியில் நியூ செல்வி கோல்ட் லோன் பைனான்ஸ் எனும் பெயரில் நிறுவனம் செயல்பட்டதாகவும் அந்த நிறுவனத்தில் 300க்கும் மேற்பட்டவர்கள் நகை அடகு வைத்ததாகவும் அடகு கடை நிறுவனத்தை இரவோடு இரவாக பூட்டிவிட்டு நகைகளை தராமல் ஏமாற்றிவிட்டனர் என்றும்

அத்தருனத்திலேயே திருப்புல்லாணி போலீஸில்‌ புகார் செய்தும் பலன் இல்லை என்றும் எனவே மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இழந்த நகையை மீட்டுத்தர வேண்டும் என்றும் ஏழை மக்களாகிய எங்களைப் போன்றவர்களை ஏமாற்றுகிறார்கள்  வேதனையுடன் தெரிவித்தனர்

ஏமாற்று நிறுவனம் நடத்தி நகை  மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன்  என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

 

VIDEOS

Recommended