• முகப்பு
  • குற்றம்
  • கடனை திருப்பி தராததால்  கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை.

கடனை திருப்பி தராததால்  கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை.

லட்சுமி காந்த்

UPDATED: Jul 15, 2024, 7:41:01 PM

Tamil Nadu Crime News

காஞ்சிபுரம் கருக்கினில் அமர்ந்தவள் கோயில் தெருவை சேர்ந்தவர் ராஜா (35). இவர் காஞ்சிபுரம் சேலை ராமசாமி தெருவில் உள்ள ஹரிகரன் என்பவரின் டாடா ஏஸ் வாகனத்தின் டிரைவராக வேலை செய்து வந்துள்ளார். 

கடந்த 2014 ஆம் ஆண்டு ஹரிகரன்,தனியார் நிதி நிறுவனத்தில், டாடா ஏஸ் வாகனத்தின் பேரில் 50 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி அந்த தொகையை செலுத்த முடியாமல் தவித்து வந்துள்ளார். 

Crime News Updates

அதனால் டிரைவர் ராஜாவிடம் 50 ஆயிரம் கடனாக பெற்று தனியார் நிதி நிறுவனத்திற்கு ஹரிகரன் செலுத்தி உள்ளார். இதனைத் தொடர்ந்து ராஜா கடனை திருப்பிக் கேட்டபோது, ஹரிகரன் காலதாமதப்படுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் ஹரிகரனிடம் இருந்து 1 சவரன் நகை வாங்கி 34 ஆயிரத்திற்கு அடகு வைத்து பணத்தை எடுத்துக்கொண்டு மீதி 16 ஆயிரம் ரூபாய் பணத்தை தொடர்ந்து கேட்டு வந்துள்ளார். 

Latest Tamil Crime News

பணத்தை தராமல் இழுத்தடித்ததால் ஆத்திரம் அடைந்த ராஜா கடந்த பிப்.13, 2015 ஆம் ஆண்டு அரிகரன் வீட்டிற்கு சென்று அவரை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு, தடுக்க வந்த மனைவியை தவறான வார்த்தைகளால் பேசி, கத்தியால் கிழித்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார். 

இதுகுறித்து சிவகாஞ்சி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, குற்றவாளி கைது செய்யப்பட்டு காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. 

Crime News

இந்த வழக்கில் அரசு தரப்பில் கூடுதல் வழக்கறிஞர் சத்தியமூர்த்தி ஆஜரானார். வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் குற்றவாளி ராஜாவிற்கு கொலை குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும், 

கொலை செய்யும் நோக்கத்துடன் வீட்டில் அத்துமீறி நுழைந்ததற்காக 5 வருட கடுங்காவல் தண்டனையும், இறந்தவரின் மனைவி ராஜேஸ்வரிக்கு காயத்தை ஏற்படுத்தியதற்காக 1 வருட கடுங்காவல் தண்டனையும்

மேலும் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து காஞ்சிபுரம் விரைவு நீதிமன்ற நீதிபதி சரவணகுமார் தீர்ப்பு வழங்கினார்.

 

VIDEOS

Recommended