புவனகிரி அருகே கோவில் உண்டியல் உடைப்பு, பணம் கொள்ளை.

சண்முகம்

UPDATED: May 27, 2024, 10:56:12 AM

District News

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே கிளாவடிநத்தம் கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ அய்யனார் கோவில். இக்கோவிலில் மர்ம நபர்கள் உண்டியலை சூலத்தால் உடைத்து உண்டியலில் இருந்த பல ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

ஒரு ஆண்டுக்குமேலாக உண்டியல் திறக்கப்படாமல் இருந்ததாக கூறப்படும் நிலையில் மர்ம நபர்கள் இரவில் கைவரிசை காட்டி இருக்கின்றனர்.

Today District News

உண்டியலில் இருந்த பணத்தை உடைத்து எடுத்துக் கொண்டு வயல்வெளி பகுதியில் வைத்து சேதமான பணத்தாள்கள் மற்றும் சில்லறை காசுகளை போட்டுவிட்டு மற்றவற்றை எடுத்துச் சென்றுள்ளனர்.

மேலும் இதே கிராமத்தில் மோட்டாரில் இருக்கும் மின் வயரும் ஏற்கனவே திருடுபோய் உள்ளது என்றும் குறிப்பிட்டு வருகின்றனர்.

தகவலின் பெயரில் விரைந்து வந்த போலீசார் தடயங்களை சேகரித்து விசாரணை செய்து வருகின்றனர். 

ஏற்கனவே புவனகிரி பகுதியில் ஒரே இரவில் நான்கு கோவில்களில் உண்டியல்கள் உடைக்கப்பட்டு பல்லாயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில் தற்போது அதே போன்று கோவில் உண்டியல் உடைப்பு ஏற்பட்டுள்ளது இப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

மேலும் வீடுகளில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் இன்னும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை.

புவனகிரி பகுதியில் தொடரும் கொள்ளை சம்பவங்களால் குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் திணறும் விடியா அரசின் காவல்துறைக்கு பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மேலும் அடுத்து எங்கு திருட்டு போகுமோ எனவும் அச்சமடைந்துள்ளனர். ஒரு வாரத்திற்கு முன்பு வீட்டின் பூட்டை உடைத்து பல லட்ச ரூபாய் கொள்ளை அடிக்க பட்ட நிலையில் தற்போது மீண்டும் மீண்டும் தொடரும் கொள்ளை அடிக்கப்பட்டுள்ள சம்பவம் புவனகிரி பகுதியில் திருட்டுக்கள் அதிகம் நடைபெற்று வருகிறது என்பதையே காட்டுகிறது என பலரும் வேதனையோடு குறிப்பிட்டு வருகின்றனர்.

 

VIDEOS

Recommended