• முகப்பு
  • குற்றம்
  • ஆசிரியையின் பணம் திருட்டு சிவில் பாதுகாப்பு படையை சேர்ந்த உத்தியோகத்தர் கைது

ஆசிரியையின் பணம் திருட்டு சிவில் பாதுகாப்பு படையை சேர்ந்த உத்தியோகத்தர் கைது

ராமு தனராஜா

UPDATED: Aug 11, 2024, 4:33:47 AM

ஆசிரியை ஒருவரின் பணப்பையை திருடி பணப்பையில் இருந்த ஏ.டி.எம் அட்டையை எடுத்து அட்டையின் மூலம் 20000 ரூபா பணத்தை வங்கியில் எடுத்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் சிவில் பாதுகாப்பு படையை சேர்ந்த உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக கிராதுருகோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

 மஹாஓயா சிவில் பாதுகாப்பு படை முகாமில் பணிபுரியும் 41 வயதுடைய புதிய மெதகம, தியவிட்டகம பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

 கடந்த ஜூன் மாதம் முதலாம் திகதி ஹோபரிய பகுதியில் வசிக்கும் ஆசிரியர் ஒருவரின் ஸ்கூட்டி ரக மோட்டார் சைக்கிளில் இருந்த பணப்பை திருடப்பட்டு உள்ளதாக கிராதுருகோட்டை பொலிஸ் நிலையத்தில் குறித்த ஆசிரியர் முறைப்பாடு செய்துள்ளார் முறைப்பாட்டு க்கு அமைய கிராதுருகோட்டை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் 

 மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து சந்தேக நபர், தெஹியத்தகண்டிய நகருக்கு மற்றுமொரு நபருடன் சென்று பணம் எடுத்துச் செல்லப்பட்டதை உறுதிப்படுத்தியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

 இதன்படி, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மஹியங்கனை நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர் 

 பதுளை பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திரு.வசந்த கந்தேவத்தவின் ஆலோசனையின் பேரில், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதாக கிராதுருகோட்டே பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சுதேஷ் சதுரங்க தெரிவித்தார்.

 

VIDEOS

Recommended