• முகப்பு
  • குற்றம்
  • திருப்புல்லாணி கோவிலில் ரூ.1 கோடி  நகைகள் மாயம் முன்னால் திவானிடம் குற்றப்பிரிவு போலீஸ் சார் மீண்டும் விசாரணை.

திருப்புல்லாணி கோவிலில் ரூ.1 கோடி  நகைகள் மாயம் முன்னால் திவானிடம் குற்றப்பிரிவு போலீஸ் சார் மீண்டும் விசாரணை.

கார்மேகம்

UPDATED: Apr 29, 2024, 9:21:27 AM

ராமநாதபுரம் அருகே உள்ள திருப்புல்லாணி ஆதிஜெகநாதப்பெருமாள் கோவிலுக்கு சொந்தமான ரூ.1 கோடி  மதிப்பிலான நகைகள் மாயமானது அதன்படி ஆதிஜெகநாதப் பெருமாள் பத்மாஷனி தாயாருக்கு அணிவிப்பதற்காக உள்ள மொத்த நகைகளில் 952 கிராம் எடை உள்ள 30 தங்க நகைகள் 1199 கிராம் எடையுள்ள 16 வெள்ளி நகைகளும்  மாயமாகியது கண்டறியப்பட்டது

இது தொடர்பாக திவான் பழனி வேல் பாண்டியன் அளித்த புகாரின் பேரில்  ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் சார் நகை பொறுப்பாளர் ஆலய தானிகர் சீனிவாச அய்யங்கார் மீது வழக்கு பதிவு செய்தனர்

சம்பவம் நடந்ததாக கூறப்படும் காலகட்டத்தில் பணியாற்றிய ராமு பாண்டி சாமிதுரை ஆகியோரிடமும் போலீஸ் சார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர் மேலும் அப்போது திவானாக பணியாற்றிய மகேந்திரனிடம் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு போலீஸ் சார் விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் முன்னால் திவான் மகேந்திரனிடம் 2 வது முறையாக நேற்று முன்தினம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் சார் தீவிர விசாரணை நடத்தினர்

இதற்காக சம்மன் அனுப்பப்பட்டு அவர் வரவழைக்கப்பட்ட நிலையில் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் பல மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தினர்

இதன் தொடர்ச்சியாக மேற்கண்ட நகைகள் மாயமான சம்பவ காலத்தில் பணியாற்றிய நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரிடமும் விசாரணை நடத்த போலீஸ் சார் திட்டமிட்டுள்ளனர்

இதற்காக அனைவருக்கும் சம்மன் அனுப்பி தனித்தனியாக விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்

இந்நிலையில் ராமநாதபுரம் கோர்ட்டில்  நாளை 30 ந் தேதி சீனிவாச அய்யங்காரின் முன்ஜாமீன் மனு மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

  • 3

VIDEOS

Recommended