திருச்சி அருகே சீட்டு விளையாடிக்கொண்டிருந்த நபரிடம் பறிமுதல் செய்த ரோலாக்ஸ் வாட்ச், 2லட்சத்தை மறைத்த எஸ்ஐ ஆயுதப்படைக்கு மாற்றம் - எஸ்பி அதிரடி.
JK
UPDATED: Sep 16, 2024, 10:29:09 AM
திருச்சி மாவட்டம்,
லால்குடி அடுத்துள்ள பச்சாம்பேட்டை கிராமத்தில் உள்ள வாழைத்தோப்பில் கடந்த வாரம் சீட்டு விளையாடி கொண்டிருந்தவர்களை தனிப்படை காவல்துறையினர் பிடித்து லால்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
சீட்டு விளையாடிய 9 நபர்கள் காவல் நிலைய சொந்த ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.
இந்த சோதனையின் போது, சீட்டு விளையாடிய ஒருவரின் கையில் அணிந்திருந்த விளைவு உயர்ந்த ரோலக்ஸ் வாட்ச் மற்றும் அவரின் காரில் இருந்த, 2லட்சம் ரூபாயை, எஸ்.பி. தனிப்படையில் உள்ள எஸ்.ஐ. வினோத் பறிமுதல் செய்துள்ளார்.
Latest Crime News In Tamil
பறிமுதல் செய்ததை கணக்கில் காட்டாமல் தானே வைத்துக் கொண்டார்.
வாட்சையும், பணத்தையும் பறிகொடுத்த நபர் இதுகுறித்து லால்குடி காவல் நிலையத்தில் ஆய்வாளரிடம் முறையிட்டார். இது குறித்து காவல் ஆய்வாளர் நடத்திய விசாரணையில், தனிப்படையை சேர்ந்த எஸ்.ஐ.வினோத், ரோலக்ஸ் வாட்ச் மற்றும் 2 லட்சம் ரூபாயை தானே வைத்துக் கொண்டது தெரியவந்தது.
இது குறித்து தகவல் அறிந்த திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் எஸ்.ஐ.வினோத், காவல்துறையினர் சுசீந்திரன், பிரபு ஆகியோரை, ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார்.
Breaking News In Tamil
ஏற்கனவே எஸ்.ஐ.வினோத் துவரங்குறிச்சியில் பணியாற்றிய போது, பறிமுதல் செய்த பணத்தை பணத்தை மறைத்த குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், சீட்டாட்டம் நடத்த உறுதுணையாக இருந்து சீட்டாடுபவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து, பணம் பெற்று வந்த, லால்குடி எஸ்.பி., தனிப்பிரிவு ஏட்டு மோகன் என்பவரையும் ஆயுதப்படைக்கு மாற்றி, திருச்சி எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்.