மயிலாடுதுறையில் ஆற்று மணல் கடத்தல்.
செந்தில் முருகன்
UPDATED: May 31, 2024, 5:04:33 AM
மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்டவிரோதமாக ஆற்று மணல் கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டார்.
இதையடுத்து, மயிலாடுதுறை திருவிழந்தூர் பகுதியில் நாகை மாவட்ட கனிமவள துறை துணை இயக்குநர் பாண்டியராஜன் மற்றும் அந்தத் துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, பைக்கில் 2 பேர் பைலட்போல் பாதுகாப்புடன் சென்ற லாரியை அதிகாரிகள் மடக்கி நிறுத்தியபோது பைக்கில் வந்தவர்கள் ஓட்டுனரை அழைத்துக் கொண்டு ஓடிவிட்டனர்.
லாரியை சோதனை செய்ததில் 3 யூனிட் கொள்ளிடம் ஆற்று மணல் இருந்தது தெரியவந்தது. லாரியை பறிமுதல் செய்து மயிலாடுதுறை காவல்நிலையத்தில் ஒப்பபடைத்தனர்.
மயிலாடுதுறை போலீசார் வழக்குப் பதிவு செய்து ஓட்டுனரைத் தேடி வருகின்றனர் சென்றவாரம் இதே போன்று லாரியை துணை இயக்குனர் பாண்டியராஜன் பிடித்து மணல்மேடு காவல்நிலையத்தில் ஒப்பபடைத்தார்.
இருந்தும் இரவு பகலாக கொள்ளிடம் ஆற்று மணல் கொள்ளை நடைபெற்றுவருவதை மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு