• முகப்பு
  • குற்றம்
  • 15 இலட்சத்திற்கும் மேற்பட்ட பெறுமதியான மரங்கள் மீட்பு- நான்கு பேர் கைது

15 இலட்சத்திற்கும் மேற்பட்ட பெறுமதியான மரங்கள் மீட்பு- நான்கு பேர் கைது

வவுனியா

UPDATED: Sep 10, 2024, 8:29:45 AM

வவுனியா மகாறம்பைக்குளம் 2ம் ஒழுங்கை பகுதியில் சட்டவிரோதமாக வெட்டப்பட்டிருந்த ஒரு தொகை மரங்கள் இருப்பதாக வவுனியா (DCDB) மாவட்ட குற்ற விசாரனைப்பிரிவு பொலிஸாருக்கு கிடைக்கெப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மகாறம்பைக்குளம் பகுதியில் உள்ள மரக்காலை ஒன்றை சோதனை செய்தபோது சட்டவிரோதமாக வெட்டப்பட்ட மரங்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.
வவுனியா பிரதிபொலிஸ் மா அதிபர் சாமந்த விஜயசேகர அவர்களின் உத்தரவுக்கு அமைவாக
வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மாலின் அஜந்த பெரேரா அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைவாக வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு (DCDB) பிரிவின் பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் அழகியவண்ண அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நடவடிக்கையில் பொலிஸ் பரிசோதகர் கஜேந்திரன்,உப பொலிஸ் பரிசோதகர் ராஜகுரு, பொலிஸ் சார்ஜன்ட் ரங்வெல,பொலிஸ் கொன்ஸதாபிள்களான சிந்தக்க, பியரத்ன, குமார, ஹேரத், ஜெயவர்த்தன, விதுசன், நாமல், குமார, அத்தநாயக்க,திசாநாயக்கஆகியோர் குறித்த நடவடிக்கை ஈடுபட்டிருந்தனர்.original/img-20240902-wa0045

VIDEOS

Recommended