வாகன சோதனையில் போக்குவரத்து விதிகளை மீறிய 652 பேர் மீது வழக்கு.
கார்மேகம்
UPDATED: May 31, 2024, 5:48:33 AM
இராமநாதபுரம் மாவட்டத்தில் போலீஸ் சார் நடத்திய வாகன சோதனையில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 652 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்
இராமநாதபுரம் மாவட்டத்தில் அதிகரித்து வரும் சாலை விபத்துக்களை தடுக்க கலெக்டர் விஷ்ணு சந்திரன் உத்தரவிட்டுள்ளார்
அதன்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தீஸ் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீஸ் சார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர் போக்குவரத்து விதிகளை மீறியவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்தனர்
இதன்படி நேற்று அதிவேகத்தில் சென்ற 3 பேர் மீதும் சிவப்பு விளக்கு எரியும் போது முன்னேறி சென்ற 4 பேர் மீதும் செல் போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டிய 9 பேர் மீதும் சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றிச் சென்ற 5 பேர் மீதும் தலைக்கவசம் அணியாத 387 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்
ALSO READ | மயிலாடுதுறையில் ஆற்று மணல் கடத்தல்.
மேலும் தலைக்கவசம் அணியாமல் பின்னால் அமர்ந்து சென்ற 37 பேர் மீதும் சீட் பெல்ட் அணியாமல் சென்ற 12 பேர் மீதும் இதர பிரிவுகளில் 195 பேர் மீதும் என மொத்தம் 652 பேர் மீது போலீஸ் சார் போக்குவரத்து விதிகளை மீறியதாக வழக்குப்பதிவு செய்தனர்
இவர்களுக்கு விதிகளை மீறிய குற்றத்திற்குகாக ரூ.4 லட்சத்து 40 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டது தொடர்ந்து மாவட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சார் எச்சரித்து உள்ளனர்.