காஞ்சிபுரம் அருகே, ஒரு குடும்பமே கஞ்சா விற்பனை.
லட்சுமி காந்த்
UPDATED: Jun 7, 2024, 12:04:56 PM
விடியா திமுக அரசு அமைந்த நாள் முதல் தமிழகத்தில் போதைப் பொருள்களின் கலாச்சாரம் அதிகரித்து வருவதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.
இதன் தொடர்ச்சியாக கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பள்ளி மாணவர்களிடையே கஞ்சா புகைக்கும் பழக்கமும் அதிகரித்து வருகின்றது.
காவல்துறையில் பணி செய்யும் சில காவலர்கள் இதற்கு உடந்தையாக கையூட்டு பெற்றுக் கொண்டு கஞ்சா வியாபாரிகளை ஊக்குவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக கழகப் பொதுச் செயலாளர் தொடர்ந்து அறிக்கைகளை விடுத்துக் கொண்டே உள்ளார். அதன் அடிப்படையில் மட்டுமே தமிழக அரசு அங்கொன்றும் இங்கொன்றுமாக கஞ்சா விற்பனையாளர்களை கைது செய்கின்றனர்.
இந்நிலையில் காஞ்சிபுரம் அடுத்த சிறுகாவேரிப்பாக்கம் பகுதியில் வாலிபர் ஒருவர் கஞ்சா விற்பனை செய்வதாக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அந்த தகவலின் அடிப்படையில் சிறுகாவேரிப்பாக்கம் பகுதிக்கு விரைந்த மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர் , சிறு காவேரிப்பாக்கம் பகுதியில் உள்ள ஏரிக்கரை ஓரம் அப்பளத் தொழிலில் ஈடுபட்டிருந்த கூலி தொழிலாளிகளுக்கும் , தனியார் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் கல்லூரி மாணவர்களுக்கும் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த ஒரு வாலிபரை மடக்கிப் பிடித்தனர்.
அவரிடம் இருந்து சுமார் 4 கிலோ எடையுள்ள கஞ்சா கைப்பற்றப்பட்டது.
காவல்துறையினரின் விசாரணையில் பிடிபட்ட அந்த வாலிபரின் பெயர் பிரகாஷ் (வயது 25) , என்றும் சிறுகாவேரிப்பாக்கம் மங்கையர்கரசி நகரில் வசிப்பவர் என்றும் கஞ்சா விற்பனையை தொழிலாகவே செய்து வருகிறார் என்றும் விசாரணையில் தெரியவந்தது.
கடந்த மே மாதம் 20 ம் தேதி அன்று இதே பகுதியில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தபோது பிடிப்பட்ட முருகன் என்பவரின் அக்கா கல்பனாவின் கணவர்தான் பிரகாஷ் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறையில் அடைக்கப்பட்ட முருகன் மீது ஏற்கனவே சிவகாஞ்சி காவல் நிலையத்தில் ஐந்து வழிப்பறி வழக்குகளும் , 3 கஞ்சா வழக்குகளும் ,உத்திரமேரூர் பகுதியில் ஒரு வழிப்பறி வழக்குகளும் நிலுவையில் உள்ளது.
ALSO READ | நாட்டுப்படகுகளை மீன்துறை அதிகாரிகள் ஆய்வு.
அதுமட்டுமல்லாமல் முருகனின் அண்ணன் காளி என்பவர் மீது ஒரு கொலை வழக்கு, கஞ்சா கடத்தல் வழக்கு என பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதும் , அதே போல காளியின் தங்கையும் பிரகாஷின் மனைவியுமான கல்பனாவும் கஞ்சா விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
அண்ணன் , தங்கை , தம்பி, மைத்துனர் என ஒரு குடும்பமே கஞ்சா விற்பனை செய்து, மாணவ மாணவிகளின் வாழ்க்கையையும், தொழிலாளர்களின வாழ்வாதாரத்தையும் சீரழிவு வருவது மிகவும் குறிப்பிடத்தக்கது.
இதுபோன்று மக்களை சீரழக்கும் கஞ்சா வியாபாரிகளை கவனித்து காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுகின்றனர்.