இராஜபாளையம் ஆதியூர்கண்மாய் மீன்பிடி குத்தகைதாரர் வெட்டிக்கொலை.
அந்தோணி ராஜ்
UPDATED: May 15, 2024, 7:00:46 AM
Vidhunagar District News
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் பகுதியைச் சேர்ந்தவர் தர்மராஜ் வயது 60 இன்ஜினியராக பணியாற்றியவர் தற்போது இராஜபாளையம் பொதுப்பணி துறைக்கு பாத்தியப்பட்ட ஆதியூர் கண்மாயை மீன் பிடிக்க குத்தகை எடுத்துள்ளார்.
இந்த கண்மாயில் பச்சைகாலணி பகுதியை சேர்ந்த கார்த்திஸ்வரன் என்பவரும் இராஜபாளையம் சம்மந்தபுரம் பகுதியைச் சேர்ந்த ஆனந்த் என்பவரும் கண்மாய் க்கரையில் குடிசை அமைத்து காவலாளிகளாக பணியாற்றியுள்ளனர்.
Today District News
இதில் பச்சைக் காலனி பகுதியைச் சேர்ந்த கார்த்திஸ்வரன் மீன்களை திருடிச் செல்வதும் வெளியாளர்களை வைத்து வலைவீசி மீன்களை பிடித்து செல்ல அனுமதித்ததும் தர்மராஜுக்கு தெரிய வந்ததை அடுத்து தர்மராஜ் அவரை கண்டித்து கடந்த மூன்று தினங்களாக காவலாளி வேலைக்கு வேண்டாம் என கூறியுள்ளார்.
அதற்கு பதிலாக முகவூர் பகுதியைச் சேர்ந்த சமுத்திரம் என்பவரை காவலாளியாக பணியில் அமைத்துள்ளார்
வழக்கம்போல் தர்மராஜ் இன்று கண்மாய்க் கரையில் அமைந்துள்ள குடிசைக்கு வந்து மீன்களை பார்த்துவிட்டு அங்கு அமர்ந்துள்ளார் அப்பொழுது காவலாளி சமுத்திரத்திடம் கண்மாய்க்குள் தார்ப்பாய் கிடக்கிறது அதை எடுத்து வாருகள் என கூறிவிட்டு அங்கு டீ குடித்துக் கொண்டிருந்த பொழுது
ALSO READ | இன்றைய ராசி பலன்கள் 15-05-24
District News Online
அங்கே கஞ்சா போதையில் வந்த கார்த்திஸ்வரன் தான் கொண்டு வந்த அறிவாளால் தலை மற்றும் கைப்பகுதிகளை சரமாரியாக வெட்டி முகத்தை சிதைத்து விட்டு கைகளை துண்டித்து விட்டு தப்பிச் சென்றுள்ளார்
தார்ப்பாய் எடுக்கச் சென்ற காவலாளி சமுத்திரம் வந்து பார்த்த பொழுது ரத்த வளத்தில் சடலமாக கிடப்பதை பார்த்து இராஜபாளையம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வழியில் சென்று நபருடன் உதவி கேட்டு காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்
தகவல் அறிந்து இராஜபாளையம் வடக்கு காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி உடற்கூர் ஆய்விற்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Online District News
மேலும் இந்த கொலையில் கார்த்திக்ஸ்வரன் மட்டும் தான் ஈடுபட்டுள்ளாரா மற்றும் வேறு யாரும் சம்பந்தப்பட்டுள்ளார்களா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருட்டுத்தனமாக மீன்பிடித்து விற்பனை செய்த நபரை கண்டித்ததால் இந்த கொலை நடந்ததாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.