• முகப்பு
  • குற்றம்
  • காஞ்சிபுரம் மேற்கு வங்க மாநில இளைஞர்க்கு சரமாரியாக கத்திக்குத்து

காஞ்சிபுரம் மேற்கு வங்க மாநில இளைஞர்க்கு சரமாரியாக கத்திக்குத்து

லட்சுமி காந்த்

UPDATED: Jul 8, 2024, 6:45:40 AM

latest Kancheepuram news & live updates 

காஞ்சிபுரம் மாநகராட்சி உட்பட்ட செங்கழுநீரோடை வீதியில் கிளாசிக் ரைடர் கேப் எனப்படும் அசைவ உணவகத்தை வினோத் என்பவர் நடத்தி வருகின்றார். இதில் பல்வேறு அசைவ உணவுகள் தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படுகின்றது. 

காஞ்சிபுரம் மாநகராட்சியில் மிக முக்கிய பகுதியான காமாட்சி அம்மன் கோவில் ,ஜெயின் கோவில் , காய்கறி மார்க்கெட், பூக்கடை சத்திரம் உள்ளிட்ட பகுதியின் மையத்தில் இந்த உணவகம் அமைந்துள்ளது. 

kanchipuram news in tamil

நேற்றிரவு உணவகம் முடிந்த பின்னர் இடத்தை எல்லாம் சுத்தம் செய்துவிட்டு கால்மிதி , மாப்பு போன்றவற்றை வெளியே வைத்துவிட்டு ஓட்டலில் பணிபுரியும் மேற்கு வங்க மாநில இளைஞர் மைஃப்புஜா (வயது 28)என்பவர் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியே போதையில் வந்து கொண்டிருந்த பூக்கடை சத்திரம் பகுதியை சேர்ந்த ரவுடி உதயா மற்றும் அவருடைய நண்பர்கள் அண்ணாமலை, சதீஷ் ஆகியோர் அந்தக் கடை வழியே வரும்போது அங்கு வைக்கப்பட்டிருந்த மாப்பு மேலே படுகின்றது .

Kancheepuram District News in Tamil 

மூவரும் அதை தட்டி விடும்போது மேற்கு வங்க இளைஞர் மீது மாப்பு விழுகின்றது. அதனால் மேற்குவங்க இளைஞர் இவர்களிடம் ஏன் இப்படி செய்கின்றீர்கள் என கேள்வி கேட்டதால் போதையில் இருந்த உதயா உள்ளிட்ட மூன்று பேரும் சேர்ந்து மைஃப்புஜா வை தாக்கியுள்ளனர்.

மேலும் அந்த உணவகத்திலிருந்த, சிக்கன் மட்டன் போன்றவற்றை வெட்ட வைக்கப்பட்டிருந்த கத்தியை எடுத்து, மைஃப்புஜா வை முதுகு இடுப்பு உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் கத்தியால் குத்தி உள்ளனர்.

kanchipuram news today live

இதில் படுகாயம் அடைந்த மைஃப்புஜா மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். 

அதிக மக்கள் நடமாட்டம் உள்ள காமாட்சி அம்மன் கோவில் பகுதியில் இந்த கத்திக்குத்து சம்பவம் மிகப் பெரும் பரப்பரப்பை உண்டாக்கிய நிலையில் தப்பி ஓடிய ரவுடி உதயா மற்றும் நண்பர்கள் அண்ணாமலை, சதீஷ் ஆகியோர் கீழே விழுந்ததில் கை கால்களில் அடிபட்ட நிலையில் அவர்களுக்கு மாவு கட்டுப் போடப்பட்டு சிவகாஞ்சி காவல்துறையினர் கைது செய்தனர்.



உதயா மீது கொலை வழக்கு அடிதடி வழிப்பறி போன்ற பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், கடந்த 20 நாட்களுக்கு முன்பு பூக்கடை சத்திரம் பகுதியில் அதிக மக்கள் நடமாட்டம் உள்ள நேரத்தில் அதீத போதையில் (கஞ்சா) பிளேடு எடுத்து வெட்டிக்கொள்வேன் தற்கொலை செய்து கொள்வேன் என 3 மணி நேரம் நடுரோட்டில் அளப்பறை செய்தார்.

பொதுமக்கள் அவரை மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்து பின்னர் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார். கடந்த வாரம் தான் சிறையில் இருந்து வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அதிக மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் வடமாநில நபர் ஒருவரை கத்தியால் குத்திய சம்பவம் காஞ்சிபுரம் நகரில் மிகுந்த பரப்பரப்பை உண்டாக்கியது.

 

VIDEOS

Recommended