• முகப்பு
  • குற்றம்
  • திருச்சி அருகே இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்த வாலிபர்கள் மீது வழக்குப்பதிவு.

திருச்சி அருகே இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்த வாலிபர்கள் மீது வழக்குப்பதிவு.

JK

UPDATED: Jun 25, 2024, 6:16:21 AM

திருச்சி மாவட்டம். சமயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிறுமருதூர் மேம்பாலம் அருகே கடந்த 22ம் தேதி  ஆறுமுகம் என்பவரது மகன் பரணிதரன் (19) டேவிட்பழனிச்சாமி என்பவரது மகன் தேவரசன் (18), பால்ராஜ் என்பவரது மகன் செபஸ்டின் டேனியல் (18), ஆகியோர் மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் மோட்டார் சைக்கிளின் முன் சக்கரத்தைச் தூக்கிகொண்டு சாகசம் செய்து, அபாயகரமாக ஓட்டிச் சென்ற வீடியோ காட்சியானது Instagram போன்ற சமூக வலைத்தளங்களில் வைரலாகிவந்தது.

5. 191/24, U/s 279, 290 IPC r/w 183 MV-ன் படி மேற்படி நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மேலும் மாலை. மேற்படி எதிரிகளில் பரணிதரன் (19) மற்றும் செபஸ்டின் டேனியல் (18 )ஆகியோர்களை கைது செய்து, அவர்கள் சாகசத்திற்கு பயன்படுத்திய 5(Yamaha R15 TN-81-H-3182. Yamaha MT-15, TN-55-BK-7008 wa Yamaha MT-15, TN-81-H-3145( செய்யப்பட்டது. 

இனிவரும் காலங்களில் இது போன்ற சாகசங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையபான சட்ட நடவடிக்கை மேற்கொண்டு. வானங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், இதுபோன்று இருசக்கர வாகனங்களில் பொதுமக்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில், இருசக்கர வாகன சாகசம் செய்பவர்கள்  விபரங்கள் குறித்து, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உதவி எண் 9487464651 என்ற எண்ணிற்கு தகவல் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 

VIDEOS

Recommended