• முகப்பு
  • குற்றம்
  • ஊராட்சி மன்ற தலைவியின் கணவரும், பாஜக நிர்வாகியுமான ரமேஷ் குமாரை சரமாரியாக அரிவாளால் வெட்டியதில் படுகாயமடைந்தார்.

ஊராட்சி மன்ற தலைவியின் கணவரும், பாஜக நிர்வாகியுமான ரமேஷ் குமாரை சரமாரியாக அரிவாளால் வெட்டியதில் படுகாயமடைந்தார்.

சுரேஷ் பாபு

UPDATED: Sep 19, 2024, 8:37:59 AM

திருவள்ளூர் மாவட்டம்

பூண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட சிறுவானூர் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருபவர் பவானி.இவருடைய கணவர் ரமேஷ் குமார் என்பவர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராகவும் ‌தற்போது பாஜக திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார். 

இந்த நிலையில் சிறுவானூர் ஊராட்சிக்கு செல்லும் சாலைகளை ஓரங்களை அப்பகுதி சேர்ந்த சிலர் ‌பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

பாஜக

அந்த பகுதியில் பொது மக்கள் சென்று வர இடையூறாக இருந்து வந்ததால் இது சம்பந்தமாக ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் அளிக்கப்பட்டதாகவும், சாலையை மீட்டுத்தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொது மக்கள் மனு அளித்ததாகவும் 

அதனை தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவரின் கணவரும் பாஜக நிர்வாகியுமான ரமேஷ், ஜேசிபி இயந்திரம் மூலம் சாலை ஓரங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ள இடங்களை அகற்றும் பணியில் ஈடுபட்ட போது, ஆக்கிரமிப்பு செய்தவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து அவர்களிடம் ரமேஷ் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது அங்கு வந்த வேலு என்பவர் இவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், திடீரென ஆத்திரமடைந்து வேலு வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து ரமேஷின் தலை மற்றும் கை பகுதியில் சரமாரியாக வெட்டியுள்ளார்.

Latest Crime News Today

இதில் பலத்த காயமடைந்த ரமேஷ் குமாரை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு திருவள்ளூர் மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து சென்னை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து திருவள்ளூர் டி எஸ் டவுன் மற்றும் தாலுக்கா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

VIDEOS

Recommended