• முகப்பு
  • குற்றம்
  • திருச்சி விமான நிலையத்தில் கம்பி வடிவில் ரூ.44 லட்சம் மதிப்பிலான தங்கம் கடத்தல்.

திருச்சி விமான நிலையத்தில் கம்பி வடிவில் ரூ.44 லட்சம் மதிப்பிலான தங்கம் கடத்தல்.

JK

UPDATED: Jun 7, 2024, 11:30:52 AM

திருச்சி விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், மலேசியா, துபாய், இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானங்களில் தங்கம் கடத்தி வரும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. 

இதை தடுக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனாலும் தங்கம் கடத்தி வரும் சம்பவம் குறைந்தபாடில்லை.

ஒவ்வொரு முறையும் நூதன முறையில் பசை வடிவிலும், கம்பி வடிவிலும், கட்டியாகவும், நகைகளாகவும், மின்சாதன பொருட்களில் மறைத்தும் தங்கத்தை கடத்தி கொண்டு இருக்கிறார்கள். 

இந்த நிலையில் நேற்று துபாயில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்பு வழியாக திருச்சிக்கு விமானம் ஒன்று வந்தது. திருச்சி விமான நிலையத்தில் விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்,

அப்போது ஆண் பயணி ஒருவரின் நடத்தையில் சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள், அவருடைய 3பைகளை சோதனை செய்தனர். 

அப்போது அவர், ரூ.44 லட்சம் மதிப்பிலான 600கிராம் தங்கத்தை கம்பி வடிவில் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து அதிகாரிகள் தங்கத்தையும் பறிமுதல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், பயணியை கைது செய்து, அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

VIDEOS

Recommended