திட்டக்குடி அருகே பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி
மைக்கேல்
UPDATED: May 1, 2024, 8:13:53 AM
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள வைத்தியநாதபுரத்தில் உள்ள போஸ்ட் ஆபீஸில் தற்காலிக போஸ்ட் மாஸ்டராக வேலை செய்து வருபவர் தொழுதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார்.
இவரது மனைவி மோனோலிசா (வயது 28) இவர் வழக்கம் போல் தொழுதூரில் இருந்து வைத்தியநாதபுரம் செல்வதற்காக தனது இரண்டு சக்கர வாகனத்தில் டாக்டர் நாவலர் நெடுஞ்செழியன் கல்லூரி அருகே சென்று கொண்டிருந்த பொழுது
பின்னால் வந்த அடையாளம் தெரியாத இரண்டு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு வாலிபா்கள் போஸ்ட் மாஸ்டர் மோனோலிசா கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறிக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.
அப்போது மோனோலிசா சுதாரித்துக் கொண்டு செயினை கையில் பிடித்துக் கொண்டதாகவும் மர்ம நபர்கள் இருவரும் அவர்கள் எடுத்துச் சென்ற இரண்டு சக்கர வாகனத்தை அங்கேயே போட்டுவிட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.
தகவல் அறிந்து வந்த க இராமந்தம உதவி ஆய்வாளர் கோபிநாத் நடந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
மேலும் கொள்ளையர்கள் விட்டுச் சென்ற இரண்டு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்து இராமநத்தம் காவல் நிலையத்தில் வைத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.