• முகப்பு
  • குற்றம்
  • கலவையில் முருகன் கோவிலில் சிசிடிவி கேமராக்கள் உடைத்து கொள்ளை.

கலவையில் முருகன் கோவிலில் சிசிடிவி கேமராக்கள் உடைத்து கொள்ளை.

பரணி

UPDATED: May 9, 2024, 7:06:13 PM

இராணிப்பேட்டை மாவட்டம், கலவை பேருராட்சிக்கு உட்பட்ட கலவை சென்ன -சமுத்திரம் சாலையில் இந்து அறநிலைத்துறைக்கு சொந்த மான ஸ்ரீ ஸ்ரீ வள்ளி தெய்-வானை சமேத சுப்பிரமணி கோவில் அமைந் துள்ளது.

இந்த பிரசித்தி பெற்ற இத்திருத்த-ளத்தில் அமாவாசை கிருத்திகை உட்பட பல்வேறு விசேஷ நாட்களில் சிறப்பு பூஜை கள் நடைபெறுவது வழக்கம் இந்நிலையில் செவ்வாய் கிழமை இரவு கோவில் பூசாரி வழக்-கம் போல் பூஜைகள் முடித்துவிட்டு பின் கோவிலை பூட்டி சென் றுள்ளார்.

கிருத்திகை என்பதால் அதிகாலை கோவிலை திறந்து உள்ளே சென்று பார்க்கும் பொழுது கோவிலின் கருவறை கேட் மற்றும் கதவு உட்பட 4 பூட்டுகள் கோவில் உள்ளே இருந்த 4 நான்கு சிசிடிவி கேமராக்கள் உடைக்கப்பட்டு கோவில் கருவறையில் இருந்த மூன்று வெள்ளி கிரீடம், மற்றும் வேல் திருடப்பட்டு உண்டியல் உடைக்கபட்டு கொள்ளையடிக்கப்பட்டத்தை பார்த்து பூசாரி அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக கோவில் நிர்வாகத்திற்கு மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார் அதனை தொடர்ந்து விரைந்து வந்த கலவை காவல் நிலைய ஆய்வாளர் கவிதா தலைமையிலான போலீசார் நேரில் சென்று சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் கைரேகை நிபுணர்கள் வர வழைக்கப்பட்டு கைரேகை எடுக்க உள்-ள தாக போலிசார் தெரிவித்தனர்.மர்ம நபர்கள் கோவி லின் பின்புறம் தடுப்பு சுவர் இல்-லாத்தை அறிந்து கன கட்சதமாக இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர்.

 

VIDEOS

Recommended