• முகப்பு
  • குற்றம்
  • கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் விஷசாரயம் அருந்திய 46 பேருக்கு சிகிச்சை 15 பேர் பலி

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் விஷசாரயம் அருந்திய 46 பேருக்கு சிகிச்சை 15 பேர் பலி

கோபி பிரசாந்த்

UPDATED: Jun 19, 2024, 6:48:26 PM

கள்ளக்குறிச்சி நகரில் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்ததாக கூறப்பட்ட 46 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுவதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கெனவே, 4 பேர் உயிரிழந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்றரும் இறப்பு. இந்த சம்பவத்தில் இறப்பின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்திருக்கிறது.

மேலும் உடல்நிலை மோசமடைந்த சிலர் புதுச்சேரி ஜிப்மர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கருணாபுரத்தைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிட படுகிறது. இறந்தவர்களை விவரும் பின்வருமாறு:

சுரேஷ், சேகர், சுரேஷ், பிரவீன், மணிகண்டன், கிருஷ்ணமூர்த்தி, மணி, இந்திரா, ஆறுமுகம், தனக்கோடி, நாராயணசாமி, ராமு உள்பட 15 பேர்கள் உயிரிழப்பு. 

சம்பவத்தை அடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் மற்றும் மது விலக்கு காவலர்கள் என கூண்டோடு மாற்றம்.

*சஸ்பெண்ட் ஆன அதிகாரிகள்!*

*கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி சம்பவம் எதிரொலியாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட அதிகாரிகள் பட்டியல்*

*எஸ்.பி., சமய்சிங் மீனா*

*டி.எஸ்.பி., தமிழ்செல்வன்*

*இன்ஸ்பெக்டர் கவிதா*

*இன்ஸ்பெக்டர் ஆனந்தன்*

*எஸ்.ஐ., ஷிவ்சந்திரன்*

*எஸ்.ஐ., பாண்டிசெல்வி*

*எஸ்.ஐ., பாரதி*

*எழுத்தர் பாஸ்கரன்*

*ஸ்பெஷல் எஸ்.ஐ., மனோஜ்*

டி.எஸ்.பி., திருக்கோவிலுார்

 

VIDEOS

Recommended