50 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் உசிலம்பட்டியை சேர்ந்த நபருக்கு 10 ஆண்டுகள் சிறை.
லட்சுமி காந்த்
UPDATED: May 8, 2024, 6:56:00 PM
தமிழகத்தின் பல மாவட்டங்களில் கஞ்சா விற்பனை கொடி கட்டி பறப்பதால் அதை பயன்படுத்தும் பல இளைஞர்களின் வாழ்க்கை சூனியமாகி வருகிறது.
காவல் துறையினரின் கையூட்டு காரணமாக தான் இந்த அளவுக்கு கஞ்சா கலாச்சாரம் பரவி பள்ளி மாணவர்களையும் பாதித்துள்ளது.
இதனாலயே தமிழகத்தில் அதிக சமூக விரோத செயல்களும் குற்ற செயல்களும் பெருகி வருகின்றது.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளடக்கிய மூன்று மாவட்டங்களின் போதை பொருள் நுண்ணறிவு பிரிவின் தலைமை அலுவலமாக காஞ்சிபுரம் செயல்பட்டு வருகிறது.
கடந்த 2022 ஆம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டம் பொன்னியம்மன் பட்டறை பகுதியில் போதை பொருள் நுண்ணறிவு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் டில்லி பாபு மற்றும் ஆய்வாளர் வசந்தி ஆகியோர் தலைமையிலான காவலர்கள் , வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது
ஒரு சொகுசு காரில் வேகமாக வந்த மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியை சேர்ந்த நில்லாமலை (வயது 42) என்பவரை மடக்கி பிடித்து காஞ்சிபுரம் வெள்ளை கேட் பகுதியில் உள்ள போதை பொருள் நுண்ணறிவுப் பிரிவு அலுவலகத்துக்கு கொண்டு வந்து பிடிப்பட்ட அந்த நபரிடம் தீவிர விசாரணை செய்த போது,
ஆந்திர மாநிலத்தில் இருந்து கடத்திவரப்பட்ட 50 கிலோ எடை உள்ள கஞ்சா மற்றும் காரை அந்த நபரிடமிருந்து பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
அந்த வழக்கில், கஞ்சா கடத்தி வந்த குற்றவாளி நில்லா மலை என்பவருக்கு பத்து ஆண்டுகள் சிறை தண்டனையும் ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதித்து சென்னை 1 கூடுதல் சிறப்பு நீதிமன்ற நீதிபதி டிஎம்டி ஜூலியட் புஸ்பா தீர்ப்பு வழங்கினார்.