அரக்கோணம் அருகே மணல் திருடிய 3 டிப்பர் லாரிகள், ஒரு ஜேசிபி பறிமுதல்.
பரணி
UPDATED: Jul 3, 2024, 7:12:31 PM
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த இலுப்பை தண்ட லம் கிராமத்தில் தனியார் நிலங்கள் மற்றும் ஓடைப் பகுதியில் சில அடி ஆழம் தோண்டினால் ஆற்று மணல் போல் மணல் கிடைக்கிறது.
இந்த மணலை சிலர் இரவு நேரத் தில் வெட்டி எடுத்து கடத்தி விற்பனை செய்வ தாக ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர் மதிக்கு தொடர்ந்து புகார் சென்றது.
இதைத் தொடர்ந்து ஆட் சியர் உத்தரவின் பேரில் இரவில் அரக்கோணம் வட்டாட்சியர் ஸ்ரீதேவி , மண்டல துணை வட் டாட்சியர் மற்றும் வருவாய்த்துறையினர் திடீரென சம்பவ இடத் தில் ரோந்து பணியில் ஈடு பட்டனர்.
அப்-போது லாரி களில் மணல் திருடி கொண்டிருந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது . அதன் பின்னர் அரக்கோணம் வட்டாட்சியர்,கிராம உதவியாளர்கள் உதவியுடன் மூன்று லாரி மற்றும் மணல் அள்ளி போடுவதற்கு பயன்படுத்திய ஒரு ஜேசிபி இயந்திரத்தை ஓட்டி வந்து தக்கோலம் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தார்.
தக்கோலம் போலீசார் வழக்கு பதிவு செய்து யாருக்கு சொந்தமான லாரி மற்றும் ஜேசிபி இயந்திரம் என விசா-ரணை நடத்தி வரு கின்றனர். மேலும் மணல் திருட்டில் ஈடுபட்ட கும் பல் குறித்தும் போலீசார் விசாரிக்கின்றனர்.
அரக் கோணம் வட்டாட்சியராக ஸ்ரீதேவி பொறுப்பேற்ற ஒரே நாளில் மூன்று லாரி ஒரு ஜேசிபி பறிமுதல் செய்தது மணல் மாபியாக்கள் இடையே அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது.