முட்டை வியாபாரி வீட்டில் 27 சவரன் தங்க நகை திருட்டு.

சுரேஷ்பாபு

UPDATED: Jun 13, 2024, 7:09:19 PM

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் கசவநல்லாத்தூர் முத்தமிழ் நகர் பகுதியில் சேர்ந்தவர் ராமு(55)-மனைவி தீபம் ஆகிய இருவரும் வசித்து வருகின்றனர் ராமு கடம்பத்தூர் பகுதியில் முட்டை கடை நடத்தி வருகிறார் 

நேற்று காலை வழக்கம் போல் முட்டை வியாபாரி ராமு வியாபாரத்திற்கு சென்று விட்டு மதியம் 3 மணி அளவில் தனது மனைவி தீபத்தை முட்டை கடையில் வியாபாரத்திற்கு அனுப்பிவிட்டு மதிய உணவு சாப்பிட்டு வியாபாரத்திற்கு மீண்டும் சென்று உள்ளார் 

கணவர் கடைக்கு வந்த பின்னர் ராமுவின் மனைவி தீபம் தனது வீட்டிற்கு மதியம் 3.30 மணி அளவில் வீட்டிற்கு வந்த நிலையில் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார் 

இதனை அடுத்து கடம்பத்தூர் காவல் நிலைய போலீசாருக்கு அளிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த போலீசார் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 27 சவரன் தங்க நகை மற்றும் 40 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் திருடப்பட்டு உள்ளது தெரியவந்தது 

மேலும் முட்டை வியாபாரி ராமு கொடுத்த புகாரின் அடிப்படையில் கடம்பத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பட்டப்பகலில் கைவரிசை காட்டிய திருடர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

பட்டப் பகலில் வீடு அதிகம் உள்ள குடியிருப்பு பகுதியில் 20 நிமிடத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 27 சவரன் தங்க நகை மற்றும் 40 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் திருடப்பட்டுள்ள சம்பவம் கடம்பத்தூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

 

VIDEOS

Recommended