வெளிநாட்டிற்கு விற்க வைத்திருந்த ரூ.22 கோடி ஐம்பொன் சிலைகள்.

JK

UPDATED: Jul 9, 2024, 1:48:25 PM

ரூ.22கோடி ஐம்பொன் சிலைகள் பறிமுதல்

தஞ்சாவூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அவ்வழியாக வந்த காரை சோதனை செய்தபோது, 3அடி உயர திரிபுராந்தகர், 2.75 அடி உயர வீணாதார தட்சிணாமூர்த்தி, 3.25 அடி உயர ரிஷபதேவர், தலா 2.75 அடி உயர மூன்று அம்மன் சிலைகள் என ஆறு உலோக சிலைகளை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Latest Trichy District News

இதனைத் தொடர்ந்து காரை ஓட்டி வந்த, சேலம், கொங்கணாபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் கண்ணன்(42), மயிலாடுதுறை கொற்கை கிராமத்தை சேர்ந்த லட்சுமணன்(64) ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். 

விசாரணையில் லட்சுமணன் 5ஆண்டுகளுக்கு முன் புதிய வீடு கட்டுவதற்காக பள்ளம் தோண்டிய போது 6ஐம்பொன் சிலைகள் கிடைத்துள்ளன. அதனை அரசு அலுவலர்களுக்கு தெரிவிக்காமல் வீட்டில் மறைத்து வைத்து இது குறித்து தனது நண்பர் ராஜேஷ் கண்ணனிடம் தெரிவித்தார்.

District News & Updates in Tamil 

ராஜேஷ்கண்ணன், லட்சுமணனின் மருமகனான சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் பகுதியை சேர்ந்த திருமுருகனுடன்,(39)லட்சுமணன் வீட்டிற்கு வந்து சிலைகளை பார்த்தனர். மூவரும் சிலைகளை வெளிநாடுகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்க திட்டமிட்டனர்.

ராஜேஷ் கண்ணனுக்கு சிலைகளை விற்கவும், வெளிநாடுகளுக்கு கடத்தவும் தொடர்பு கிடைத்தது. அதன்படி, ராஜேஷ் கண்ணனும், திருமுருகனும் அவரது காரில் மயிலாடுதுறை கொருக்கை கிராமத்தில் உள்ள லட்சுமணன் வீட்டிலிருந்து, சிலைகளை எடுத்துக்கொண்டு திருச்சி வழியாக சென்னை செல்லும்போது பிடிபட்டனர்.

News

இது தொடர்பாக ராஜேஷ் கண்ணன், திருமுருகன், லட்சுமணன் மூவரையும் கைது செய்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

மீட்கப்பட்ட சிலைகள் குறித்து தொடர்ந்து தீவிர விசாரணை விசாரணையை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

 

VIDEOS

Recommended