திருச்சி விமான நிலையத்தில் 16லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்.
JK
UPDATED: Jun 14, 2024, 6:49:11 PM
திருச்சி விமான நிலையத்தில் இருந்து இன்று காலை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான மூலம் சிங்கப்பூர் செல்வதற்காக நூற்றுக்கு மேற்பட்ட பயணிகள் திருச்சி விமான நிலையத்திற்கு வந்தனர்.
அவர்களின் ஆவணங்கள் மற்றும் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொள் இருந்த ஒரு ஆண் பயணியின் தனது சூட்கேஸில் அமெரிக்க டாலர் 9 லட்சத்தி 91ஆயிரம் பணம் மறைத்து கொண்டு வந்ததை கண்டறிந்தனர்.
இதே போல் மற்றொரு ஆண் பயணியிடம் ரூபாய் 1லட்சம் மதிப்புள்ள அமெரிக்கா டாலர், பங்களாதேஷ் நாட்டின் பணம் 4லட்சத்தி 84ஆயிரம் மற்றும் இந்திய நாட்டின் பணம் ரூபாய் 2லட்சம் ஆகியவை சூட்கேசில் மறைத்துக் கொண்டு செல்வதை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் இரு பயணியிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இரு பயனிடமும் சுமார் 16.75 லட்சம் வெளிநாட்டு கரன்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நேற்று இரவு சுமார் ஒரு கோடி மதிப்புள்ள தங்கம் பிடிபட்ட நிலையில் இன்று காலை 16.75 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் சிக்கி இருப்பது திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 10ம் தேதி தான் புதிய விமான முனையம் செயல்பட தொடங்கிய நிலையில் தொடர்ந்து தங்கம் மற்றும் வெளிநாட்டு அரசுகள் சிக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.