பூந்தமல்லி அருகே ஆந்திராவில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட 100 கிலோ கஞ்சா
S.முருகன்
UPDATED: Jun 19, 2024, 11:26:02 AM
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி நசரத் பேட்டை அருகே வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சந்திரமவுலி சமையல் நான்கு போக்குவரத்து காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கிடமாக வந்த காரை மடக்கி சோதனை செய்தபோது காரில் இருந்தவர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓடிய நிலையில் அவர்களை போலீசார் விரட்டி சென்றும் பிடிக்க முடியாததால் காரை சோதனை செய்தபோது அதில் சிறு, சிறு பைகளில் கஞ்சா இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து கார் மற்றும் கஞ்சாவை பறிமுதல் செய்த போக்குவரத்து காவல்துறையினர் பூந்தமல்லி மதுவிலக்கு காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
பின்னர் காவல்துறை விசாரணையில் பிடிப்பட்டது சுமார் 100 கிலோ கஞ்சா எனவும் இரவு ஆந்திராவிற்கு சென்று அங்கிருந்து காரில் கஞ்சாவை எடுத்துகொண்டு காலையில் வந்திருக்கலாம் போலீசாரை கண்டதும் காருடன் கஞ்சாவை விட்டு விட்டு தப்பி சென்றது தெரியவந்தது.
மேலும் தப்பியோடிய நபர்கள் யார் இந்த சம்பவத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்புள்ளது என்பது குறித்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஆந்திராவில் இருந்து காரில் கஞ்சா கடத்தி வந்தவர்கள் போலீசாரை கண்டதும் தப்பி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.