• முகப்பு
  • சினிமா
  • இலங்கை மக்களுடன் இசை மழையோடு சங்கமிக்க இருக்கும் விஜய் எண்டனி

இலங்கை மக்களுடன் இசை மழையோடு சங்கமிக்க இருக்கும் விஜய் எண்டனி

இர்ஷாத் ரஹ்மத்துல்லா

UPDATED: Jul 22, 2024, 7:08:10 AM

இலங்கை மக்களுடன் 20 வருட கால நெருங்கிய தொடர்பை கொண்டவன் நான் என்று இலங்கைக்கு வருகைத்தந்துள்ள இந்திய முன்னணி தமிழ் திரையுலக நடிகரும்,பிரபல இசையமைப்பாளருமான விஜய் எண்டனி தெரிவித்தார்.

original/inshot_20240721_212015684
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 7 ஆம் திகதி கொழும்பு சுகதாச உள்ளக அரங்கில் நடை பெற ஏற்பாடாகியுள்ள விஜய் அண்டனி கலந்து கொள்ளும் இசை நிகழ்ச்சி தொடர்பான செய்தியாளர் சந்திப்பு மற்றும் அறிமுக நிகழ்வு இன்று கொழும்பு ONE GALLE FACE MALL இல் இடம் பெற்றது.

SATHIES PRODUCTIONS & SATHIES JEWELLERS  தலைவர் மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர் ராமய்யா சதாசிவம் AARA ENTERTAINMENT நிறுவனத்தின் பணிப்பாளர் ராமநாதன ஆனந்த ராஜா, ஆகியோரின் ஏற்பாட்டில் இந்த ஊடக சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன் போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு விஜய் எண்டனி பதிலளிக்கையில் –

original/inshot_20240721_212331146

இலங்கை என்பது எனது நேசத்திற்கு நெருக்கமானது.இங்குள்ள மக்கள் மிகவும் பாசத்துக்குரியவர்கள்,எனது இசைப்பயணத்தில் அவர்களின் ஆதரவு மிகவும் உச்சத்தில் இருப்பதை இன்று நான் கண்கூடாக கண்டுகொண்டேன்.

எதிர்வரும் செப்தம்பர் மாதம் இலங்கை இசைப் பிரியர்களை மகிழ்விக்க வருகைத்தரவுள்ளேன்.உங்களையும் மன நிறைவுடன் செல்ல அன்றைய தினம் கொழும்புக்கு வாருங்கள் என்று மக்களை அழைக்கின்றேன்.

எதிர்காலத்தில் இலங்கையிலும் தமிழ் திரைப்படத்தை எடுப்பதற்கு திட்டமிட்டுள்ளேன்,இதில் இலங்கை கலைஞர்களுக்கு அதிகமான இடம் கொடுக்க எண்ணியுள்ளதாகவும் திரையுலக நட்சத்திரம் விஜய் எண்டனி இதன் போது கூறினார்.

 இந்த விலை இலங்கைக்கு வருகை தந்திருக்கின்ற திரையுலக நட்சத்திரம் விஜய் ஆண்டனிக்கு இலங்கையின் புரவலர் புத்தகப் பூங்கா தொழிலதிபர் ஹாசிம் ஓமார்  தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்தார்.

 

VIDEOS

Recommended