• முகப்பு
  • சினிமா
  • இயக்குனர் ஹரி வீதி வீதியாக சென்று ரத்னம் திரைப்படம் பார்க்க அனைவரும் தியேட்டருக்கு வர அழைப்பு.

இயக்குனர் ஹரி வீதி வீதியாக சென்று ரத்னம் திரைப்படம் பார்க்க அனைவரும் தியேட்டருக்கு வர அழைப்பு.

சக்திவேல்

UPDATED: Apr 24, 2024, 8:54:37 AM

இயக்குனர் ஹரி இயக்கத்தில் விஷால் நடித்த ரத்னம் திரைப்படம் வருகிற 26 ஆம் தேதி நாடு முழுவதும் வெளியாக உள்ளது. அதேபோன்று புதுச்சேரியிலும் ரத்னம் திரைப்படம் வெளியாகிறது.

இந்த நிலையில் ரத்னம் திரைப்பட வெளியாக உள்ள புதுச்சேரி சண்முகா திரையரங்கிற்கு வந்த இயக்குனர் ஹரி, விஷால் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.

அப்பொழுது நடிகர் விஷாலுக்கு மூன்றாவது திரைப்படமாக இந்த படத்தை இயக்கி உள்ளதாகவும் மிகப்பெரிய வெற்றியை இந்த திரைப்படம் ஏற்படுத்திக் கொடுக்கும் எனவே அனைவரும் திரையரங்கில் வந்து பார்க்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து தியேட்டரில் குழுமி இருந்த விஷால் ரசிகர்கள் இயக்குனரிடம் செல்பி எடுத்தும் போட்டோ எடுத்தும் மகிழ்ந்தனர்.



இதனைத் தொடர்ந்து புதுச்சேரி நகரப் பகுதிக்கு வந்த இயக்குனர் ஹரி, நேரு வீதி, பாரதி வீதி, மகா மகாத்மா காந்தி வீதி, குபேர் அங்காடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று அங்கிருந்த பூ வியாபாரி, பழ வியாபாரி, காய்கறி வியாபாரி, மற்றும் ஆட்டோ டிரைவர்கள் உள்ளிட்ட பொதுமக்களிடம் 26-ம் தேதி வெளியாகியுள்ள விஷால் நடித்த ரத்னம் திரைப்படத்தை அனைவரும் திரையரங்கில் வந்து பார்க்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார் மேலும் அவருக்கு வியாபாரிகளும் வரவேற்பும் அளித்தனர்.

 

VIDEOS

Recommended