• முகப்பு
  • சென்னை
  • குன்றத்துார் அருகே பைபாஸ் சாலையோரம் கழுத்து இறுக்கிய நிலையில் இளைஞர் சடலம் மீட்பு.

குன்றத்துார் அருகே பைபாஸ் சாலையோரம் கழுத்து இறுக்கிய நிலையில் இளைஞர் சடலம் மீட்பு.

S.முருகன்

UPDATED: Jun 13, 2024, 6:59:57 PM

குன்றத்துார் அருகே இரண்டாம்கட்டைளை அடுத்த சதனந்தபுரம் பகுதியை கடந்து செல்லும் தாம்பரம்—மதுரவாயல் பைபாஸ் சாலையின் சர்வீஸ் சாலையோரம் உள்ள இரும்பு தடுப்பில் நைலான் கயிற்றால் கழுத்து இறுக்கிய நிலையில் 25 வயது மதிக்க தக்க வடமாநில இளைஞர் அமர்ந்த நிலையில் மர்ம மான முறையில் நேற்று இறந்து கிடந்தார்.

இதைப்பார்த்தவர்கள் குன்றத்துார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்தவர் யார் என அடையாளம் தெரியவில்லை. இவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டார என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

VIDEOS

Recommended