அய்யப்பன் தாங்கலில் பசுமை வாக்குச்சாவடி மையம்

S.முருகன்

UPDATED: Apr 19, 2024, 10:41:21 AM

ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அய்யப்பன் தாங்கல் ஊராட்சியில் உள்ள அரசு பள்ளி வளாகத்தில் பசுமை வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டு இருந்தது

பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை புறக்கணித்து அதன் உபயோகத்தை தடுக்கும் வகையில் பசுமை வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டு இருந்தது

இந்த வாக்குச்சாவடி மையம் நுழைவாயிலில் செடிகள் வைக்கப்படும் பச்சை பசேல் என தென்னங்கீற்றுகள் மற்றும் பச்சை நிறத்தில் வர்ணம் பூசி அதிக அளவில் செடிகள் வைக்கப்பட்டு இருந்தது

அது மட்டுமின்றி பாக்கு மட்டை தட்டுகளால் கைவிரலை காண்பிப்பது போன்றும், பானைகளில் குடிநீர் வைத்தும் பசுமை வாக்குச்சாவடி மையத்தை அமைத்திருந்தனர்

இந்த வாக்குச்சாவடி மையத்தில் வாக்களித்த வாக்காளர்கள் ஆர்வமுடன் தங்களது வாக்குகளை செலுத்தி விட்டு சென்றனர்.

பிளாஸ்டிக் உபயோகத்தை தடுக்கவும் அதன் பயன்பாட்டை முற்றிலும் தடுக்கவும் பசுமை வாக்கு சாவடி மையம் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

  • 12

VIDEOS

RELATED NEWS

Recommended