• முகப்பு
  • வணிகம்
  • குற்றவியல் விவகாரங்களில் பரஸ்பர ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்

குற்றவியல் விவகாரங்களில் பரஸ்பர ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்

அஷ்ரப் ஏ சமத்

UPDATED: Jul 28, 2024, 5:21:12 PM

பாகிஸ்தானின் தேசிய பொறுப்புக்கூறல் பணியகம் (NAB) மற்றும் இலங்கை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) ஆகியவற்றுக்கு இடையே குற்றவியல் விவகாரங்களில் பரஸ்பர ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கொழும்பில் கைச்சாத்திடப்பட்டது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு கொழும்பில் உள்ள இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கான ஆணைக்குழுவின் (CIABOC) அலுவலகத்தில் நடைபெற்றது.

பாகிஸ்தானின் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு நிலை) பாஹீம் உல் அஸீஸ் அவர்கள் பாகிஸ்தானின் தேசிய பொறுப்புக்கூறல் பணியகத்தின் சார்பாக கைசாத்திட்டார்.

பொது இயக்குநர் திரு W.K.D. விஜேரத்ன அவர்கள் இலங்கை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு சார்பாக கைசாத்திட்டார்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், ஊழல் மற்றும் பணமோசடிக்கு எதிரான கூட்டு முயற்சிகளை வலுப்படுத்துவதுடன், இரு நாடுகளின்நிறுவனங்களுக் கிடையே திறன் மற்றும் நிறுவன


கட்டமைப்பை வலுப்படுத்துகிறது.

 

VIDEOS

Recommended