• முகப்பு
  • வணிகம்
  • பருத்தி மறைமுக ஏலத்தில், பருத்தி சாகுபடி செலவிற்கேற்ப விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் வேதனை.

பருத்தி மறைமுக ஏலத்தில், பருத்தி சாகுபடி செலவிற்கேற்ப விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் வேதனை.

ரமேஷ்

UPDATED: Jul 10, 2024, 7:14:49 PM

பருத்தி மறைமுக ஏலம்

கும்பகோணத்தில் கொட்டையூரில் உள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இவ்வாண்டிற்கான பருத்தி மறைமுக ஏலம் கடந்த மாதம் 12ஆம் தேதி புதன்கிழமை தொடங்கியது. 

இந்த ஏலம் வாரந்தோறும் புதன் கிழமை நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 5வது வாரமாக இன்று நடைபெற்ற பருத்தி மறைமுக ஏலத்தில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று, 305 டன் பருத்தி ஏலத்திற்கு கொண்டு வரப்பட்டது.

District News Headlines in tamil

இந்த ஏலத்தில் ஆந்திரா, தெலங்கானா, தேனி, விருதுநகர், கும்பகோணம், கொங்கனாபுரம், செம்பொன்னார்கோயில் ஆகிய பகுதிகளை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட வணிகர்கள் கலந்து கொண்டு பருத்திகளை நேரில் பார்வையிட்டும், சோதனையிட்டும் விலை நிர்ணயம் செய்தனர். 

கடந்த வாரம் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் அதிகபட்சமாக குவிண்டால் ரூபாய் 7 ஆயிரத்து 519 ஆகவும், குறைந்தபட்சமாக ரூபாய் 6 ஆயிரத்து 469 ஆகவும், சராசரியாக விலை ரூபாய் 6 ஆயிரத்து 889 ஆகவும் இருந்தது. தற்போது இன்று பருத்தி ரூ 5,500க்கு ஏலம் கேட்டனர்.

District News Headlines in tamil

விவசாயிகள் ஒரு குவிண்டால் பஞ்சு விலை 9 ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் வரை எடுத்தால் தான் எங்களுக்கு கட்டுப்படியாகும். என்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து விவசாயிகளிடம் கேட்டபோது ஒரு ஏக்கர் பருத்தி பயிடுவதற்கு 20 ஆயிரத்தில் இருந்து 30 ஆயிரம் வரை செலவாகிறது.

ஒரு குவிண்டால் பஞ்சு எடுப்பதற்கு ஆயிரத்து 500 ரூபாய் வரை செலவாகிறது. பருத்தி எடுப்பதற்கு ஒரு நாளுக்கு ஒரு ஆளுக்கு 200 ரூபாய் வரை கொடுக்கப்படுகிறது.

News

ஆதலால் ஒரு குவிண்டால் பஞ்சு விலை 9 ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் வரை எடுத்தால் தான் எங்களுக்கு கட்டுப்படியாகும். மழை பாதிப்பின் காரணமாக ஒரு ஏக்கருக்கு 12 குவிண்டால் வரை எடுக்கக்கூடிய பஞ்சு இப்போது 8 குவிண்டால் மட்டுமே கிடைக்கிறது” என்று தெரிவித்தனர். 

தொடர்ந்து பருத்தி விவசாயிகள் பஞ்சு மூட்டையை வீட்டில் எடை போட்டபோது 83 கிலோ இருந்தது. ஆனால் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வந்து எடை போட்டபோது, 73 கிலோ தான் இருக்கிறது.

District News & Updates in Tamil 

இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டதும் 75 கிலோ என்று எழுதுகிறார்கள். ஒரு தாட்டிற்கு 8 கிலோ முதல் 10 கிலோ வரை குறைகிறது. ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு மின்னணு தராசுகளை வழங்கிட வேண்டும்” என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

VIDEOS

Recommended