அமெரிக்க பொருளாதாரம் முதல் உக்ரைன் - ரஷியா போர் வரை அனல் பறந்த டிரம்ப் - கமலா ஹாரிஸ் நேரடி விவாதம்.
கார்மேகம்
UPDATED: Sep 12, 2024, 9:23:19 AM
வாஷிங்டன்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலையொட்டி டிரம்ப்- கமலா ஹாரிஸ் இடையே அனல் பறக்கும் விவாதம் நடந்தது
( முதல் நேரடி விவாதம்)
அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் 5- ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது
இந்த தேர்தலையொட்டி ஜனாதிபதி வேட்பாளர்கள் இடையே நேரடி விவாதம் நடைபெறுவது வழக்கமாக உள்ளது
தகுதியான வேட்பாளர் யார் என்பதை அமெரிக்க மக்கள் தேர்வு செய்வதற்கான முக்கிய நிகழ்வாக இந்த விவாதப் போட்டி பார்க்கப்படுகிறது
கமலா ஹாரிஸ்
அந்த வகையில் தற்போதைய தேர்தலில் வேட்பாளர்களாக களம் இறங்கியுள்ள குடியரசு கட்சியை சேர்ந்த முன்னால் ஜனாதிபதி டிரம்ப் மற்றும் ஆளும் ஜனநாயக கட்சியை சேர்ந்த துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ஆகியோர் இடையேயான முதல் நேரடி விவாதம் நேற்று நடந்தது.
அமெரிக்காவின் பிரபல செய்தி நிறுவனத்தின் சார்பில் பிலடெல்பியா மாகாணத்தில் உள்ள தேசிய அரசியலமைப்பு மையத்தில் இந்த விவாதம் நடைபெற்றது
விவாத மேடைக்கு வந்த டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் கைகுலுக்கிக் கொண்ட பின்னர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் நின்றனர்
அதனை தொடர்ந்து செய்தி நிறுவனத்தின் 2 நெறியாளர்கள் விவாதத்தை தொடங்கினர்
( ரஷியா - உக்ரைன் போர்)
முதல் கேள்வியாக நாட்டின் பொருளாதார நிலை குறித்து கேட்கப்பட்டது அதாவது அமெரிக்கர்கள் 4 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைக் காட்டிலும் தற்போது நன்றாக இருப்பதாக கருதுகிறார்களா ?
என்பது கேள்வி
அதற்கு பதிலளித்த கமலா ஹாரிஸ் டிரம்பின் ஆட்சிக்காலத்தில் பொருளாதாரம் பெரும் சரிவை சந்தித்தது மோசமான வேலைவாய்ப்பின்மை சிக்கல் ஏற்பட்டது என குற்றம் சாட்டினார்
மேலும் தான் ஜனாதிபதியானால் வாய்ப்புகளை தரும் பொருளாதாரத்தை கட்டமைப்பதுடன் நடுத்தர மக்களின் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பேன் என்றும் கமலா ஹாரிஸ் உறுதியளித்தார்.
கமலா ஹாரிசின் குற்றச்சாட்டை மறுத்த டிரம்ப் எனது ஆட்சி காலத்தில் தான் அமெரிக்க பொருளாதாரம் மிக செழிப்பாக இருந்தது என்றார்
ரஷியா உக்ரைன் போர் குறித்து பேசிய கமலா ஹாரிஸ் நல்ல வேளை இந்த போர் மூண்ட தருணத்தில் நீங்கள் ( டிரம்ப்) ஜனாதிபதியாக இருக்கவில்லை
இல்லாவிட்டால் இந்நேரம் புதின் கீவ் நகரில் அமர்ந்து கொண்டு ஐரோப்பிய நாடுகளை எப்படி தாக்குவது என்று திட்டம் தீட்டிக் கொண்டு இருந்திருப்பார்
டிரம்ப்
( இஸ்ரேல் இல்லாமல் போகும்)
அதற்கு பதிலளித்த டிரம்ப் கமலா ஹாரிஸ் தான் அமெரிக்க வரலாற்றிலேயே மிக மோசமான துணை ஜனாதிபதி உக்ரைன்- ரஷிய - போரை அவர் தடுக்க தவறிவிட்டார் என்றார்
தொடர்ந்து பேசிய டிரம்ப் இஸ்ரேல் தாக்குதலில் 40 ஆயிரம் பாலஸ்தீனர்கள் இறந்துவிட்டனர் நான் மட்டும் ஜனாதிபதியாக இருந்திருந்தால் இந்தப் போர் மூண்டிருக்காது கமலா ஹாரிசுக்கு இஸ்ரேல் மீது கடும் வெறுப்பு உண்டு அவர் அமெரிக்க ஜனாதிபதியானால் 2 ஆண்டுகளில் இஸ்ரேல் என்ற நாடே இல்லாமல் போய்விடும் என்றார்.
அதற்கு கமலா ஹாரிஸ்
டிரம்பின் இந்த குற்றச்சாட்டை நான் மறுக்கிறேன் அவர் பிரச்சினையை திசை திருப்பி பிரித்தாள முயற்சிக்கிறார் அவருக்கு எப்போதுமே சர்வாதிகாரிகள் மீது அபிமானம் உண்டு என்பது அனைவரும் அறிந்ததே அவர் தன்னையே ஒரு சர்வாதிகாரியாகப் பார்க்கவே விரும்புகிறார் என்று பதிலடி கொடுத்தார்
கமலா ஹாரிஸ் ஜனாதிபதியானால் மக்கள் தங்கள் தற்காப்புக்காக வைத்துள்ள துப்பாக்கிகளை அவர்களிடம் இருந்து பறிப்பார் என டிரம்ப் குற்றம் சாட்டினார்.
அமெரிக்க தேர்தல்
( கமலா ஹாரிசின் இன
அடையாளம்)
அப்போது குறிக்கிட்ட கமலா ஹாரிஸ் நானும் துப்பாக்கி வைத்துள்ளேன் நான் யாருடைய துப்பாக்கியையும் பறிக்கப் போவதில்லை என்றார்
டிரம்ப் தனது தேர்தல் பிரச்சாரங்களில் கமலா ஹாரிசின் இன அடையாளம் குறித்து பல முறை விமர்சித்தது தொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது
அதற்கு டிரம்ப் அவர் ( கமலா ஹாரிஸ்) யார் என்பது குறித்து நான் கவலை கொள்ளவில்லை என டிரம்ப் பதிலளித்தார்
அமெரிக்க மக்களைப் பிளவுபடுத்த இனத்தை பயன்படுத்த முயற்சித்த ஒருவர் தொடர்ந்து ஜனாதிபதியாக விரும்புவது துர திருஷ்டமானது என்று கமலா ஹாரிஸ் தெரிவித்தார்
தொடர்ந்து கருக்கலைப்பு உரிமைகள் எல்லை பிரச்சினை வரி விதிப்பு சீனாவுடனான மோதல் உள்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக டிரம்ப் கமலா ஹாரிஸ் இடையே அனல் பறக்கும் விவாதம் நடந்தது.