ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் திடீர் விபத்து
இர்ஷாத் ரஹ்மதுல்லா
UPDATED: May 22, 2024, 1:17:41 AM
இன்று ஞாயிற்றுக்கிழமை ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் நாட்டின் வடமேற்குப் பகுதிக்கு விஜயம் செய்த போது விபத்து சம்பவம் ஒன்றிணை எதிர்கொண்டதாக ஈரானின் தேசிய தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
இப்பகுதியில் அடர்ந்த பனிமூட்டம் காரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும், இதனால் மீட்பு குழுவினருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அந்த ஹெலிகாப்டரில் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியனும் இருந்துள்ளார்.
ரைசி கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் பயணம் செய்து கொண்டிருந்தார். வடமேற்கு தெஹ்ரானில் சுமார் 600 கிலோமீட்டர் (375 மைல்) தொலைவில் உள்ள அஜர்பைஜான் குடியரசின் எல்லையில் உள்ள ஜோல்ஃபா நகருக்கு அருகில் இந்த சம்பவம் நடந்தது.
அஜர்பைஜான் ஜனாதிபதி இல்ஹாம் அலியேவ் உடன் ஒரு அணையைத் திறப்பதற்காக ரைசி இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அஜர்பைஜானுக்கு வந்திருந்தார்.