• முகப்பு
  • உலகம்
  • லண்டன் இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் விற்பனை செய்வதை தடை செய்வது ஹமாஸை வலுப்படுத்தும் - டேவிட் கேமரூன்

லண்டன் இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் விற்பனை செய்வதை தடை செய்வது ஹமாஸை வலுப்படுத்தும் - டேவிட் கேமரூன்

இர்ஷாத் ரஹ்மதுல்லா

UPDATED: May 13, 2024, 2:01:37 AM

காசாவில் போர் நடந்து வரும்நிலையில் இஸ்ரேலுக்கு ஆயுத விநியோகத்தை கட்டுப்படுத்துவது ஹமாஸை பலப்படுத்தும் என பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் லார்ட் டேவிட் கேமரூன் தெரிவித்துள்ளார்.

 கேமரூன் இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்ளும் என்று கூறினார். 'ஆயுத ஏற்றுமதியில் எங்களின் அணுகுமுறையை மாற்றுவோம் என்று இன்று எளிமையாக அறிவித்தால், அது ஹமாஸை வலிமையாக்கும், பணயக்கைதிகள் ஒப்பந்தத்தை குறைக்கும்' என்று கேமரூன் கூறினார்.

 இதற்கிடையில், ஞாயிற்றுக்கிழமை காலை காசா பகுதியில் இஸ்ரேல் மேலும் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இரண்டு மருத்துவர்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 காசாவின் வடக்கில் பயங்கரவாதிகளை ஒழித்துவிட்டதாக இஸ்ரேலிய இராணுவம் கூறுகிறது, மேலும் தெற்கில் பொது மக்கள் வெளியேற்ற உத்தரவுகளைத் தொடர்ந்து வடக்கில்,குறைந்தது 100,000 பாலஸ்தீனியர்கள் வெளியேற்றப்பட வேண்டும் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

 இஸ்ரேலிய இராணுவத்தின் கூற்றுப்படி, ரஃபாவில் உள்ள சுமார் 300,000 மக்கள் சமீபத்தில் நகரத்தை விட்டு 'மனிதாபிமான மண்டலம்' நோக்கிச் செல்லும் கோரிக்கைக்குக் கீழ்ப்படிந்தனர்.

இன்று திங்கட்கிழமை முதல், மக்கள் 'அல்-மவாசியில் உள்ள மனிதாபிமான மண்டலத்திற்குச் செல்கின்றனர்' என்று இஸ்ரேலிய இராணுவம் சனிக்கிழமை கூறியது.

காசா பகுதியில் இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கை அக்டோபர் 7 ஆம் திகதி அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய வரலாறு காணாத தாக்குதலினை அடுத்து இஸ்ரவேல் தாக்குதலுக்கு தூண்டப்பட்டது.

 ஹமாஸ் இயக்கத்தினர் இஸ்ரேலிய நகரங்களை ஆக்கிரமித்து பொதுமக்களுக்கு எதிராக அட்டூழியங்களை செய்ததாகவும் அவர்கள் சுமார் 250 பேரைக் கடத்தியதுடன் 128 பேர்களை பணயக்கைதிகளாக இன்னும் ஹமாஸ் மற்றும் பிற போர்க்குணமிக்க பாலஸ்தீனிய குழுக்களால் பிடிக்கப்பட்டுள்ளனர் என்றும் டேவிட் கேமரூன் குறிப்பி டுகின்றார் 

 

VIDEOS

Recommended