தி கிரேட் இந்தியா செய்தி எதிரொலியாக நெல்லிக்குப்பம் நகராட்சி பகுதியில் அனுமதியின்றி எடுத்து வரப்பட்ட மலக்கழிவு வாகனம் பறிமுதல்.

குமரவேல்

UPDATED: Oct 21, 2023, 9:15:12 PM

கடலூர் மற்றும் நெல்லிக்குப்பம் பகுதிகளில் இருந்து வீடுகள், வர்த்தக நிறுவனங்கள், திருமண மண்டபங்கள், பள்ளி, கல்லூரி கல்லூரிகளிலிருந்து தனியார் வாகனங்கள் மூலம் நெல்லிக்குப்பம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் மனித மலக்கழிவுகள் அனுமதியின்றி கொட்டப்படுவதை கடந்த 5ம் தேதி செய்தி வெளியிட்டிருந்தோம்.

செய்தி எதிரொலியாக நெல்லிக்குப்பம் நகராட்சி பகுதியில் அனுமதியின்றி எடுத்து வரப்பட்ட மலக்கழிவு வாகனத்தை ஆணையர் கிருஷ்ணராஜன் தலைமையில் அலுவலர்கள் வாகனத்தை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.

மனித கழிவுகளை மனிதனே அகற்றும் நடைமுறைக்கு நீதிமன்றம் கடுமையான கண்டனத்தை பதிவு செய்ததைத் தொடர்ந்து கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் உத்தரவின் பேரில் நகரில் விதிமுறைகளை மீறி நகராட்சி உரிமம் பெறாத மனித கழிவுநீர் நச்சு தொட்டியை சுத்தம் செய்யும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கையும் வாகனங்களை பறிமுதல் செய்யப்படும் எனவும் தெறிவித்திருந்தார்.

மேலும் பொது மக்களுக்கு கட்டணமில்லா 14420 தொலைபேசி எண்களும் கொடுக்கப்பட்டது.

ஆனால் நகராட்சி நிர்வாகத்தின் எச்சரிக்கையை மதிக்காத ஒரு சில தனியார் நபர்கள் சட்ட விரோதமாக மலக்கழிவுகள் அகற்றுவதாக வந்த தொடர் புகார்களை தொடர்ந்து இன்று மதியம் ஆணையர் கிருஷ்ணராஜன் தலைமையில் பொறியாளர் பாரதி, சுகாதார ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன், வருவாய் ஆய்வாளர் சரஸ்வதி, துப்புரவு மேற்பார்வையாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் கடலூர் -பண்ருட்டி மெயின் ரோட்டில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது கடலூர் மஞ்சக்குப்பத்தை சேர்ந்த முனியப்பன் மகன் முருகன் (45) என்பவர் ஓட்டிவந்த வாகனத்தை சோதனை செய்ததில் அனுமதியின்றி மலக்கழிவுகளை வாகனத்தில் ஏற்றி வந்தது தெறிந்தது. அதனைத் தொடர்ந்து மேற்படி நபரின் வாகனத்தை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்பட்டது.

VIDEOS

RELATED NEWS

Recommended