• முகப்பு
  • இலங்கை
  • நாட்டு மக்களுக்கிடையே பரஸ்பர புரிந்துணர்வை ஊக்குவிக்க முடிந்துள்ளது அமெரிக்க தூதுவர் ஜுலீ சங் தெரிவிப்பு

நாட்டு மக்களுக்கிடையே பரஸ்பர புரிந்துணர்வை ஊக்குவிக்க முடிந்துள்ளது அமெரிக்க தூதுவர் ஜுலீ சங் தெரிவிப்பு

கண்டி நிருபர் ஜே.எம்.ஹாபீஸ்

UPDATED: Dec 11, 2024, 7:18:54 AM

அமெரிக்கன் கோனர்’ மத்திய நிலையங்கள் மூலம் வழங்கப்படும் இலவச நிகழ்ச்சித்திட்டங்கள் ஊடாக நாட்டு மக்களுக்கிடையே பரஸ்பர புரிந்துணர்வை ஊக்குவிக்க முடிந்துள்ளதாக அமெரிக்க தூதுவர் ஜுலீ சங் தெரிவித்தார்.

கண்டியில் இயங்கும் 'அமெரிக்கன் கோனர்' (American Corner) மத்திய நிலையத்தில் இடம்பெற்றவைபவத்தில் அவர் இனைத் தெரிவித்தார். மேற்படி அமைப்பு ஆரம்பிக்கப்பட்டு 20 வருடம் நிறைவடைவதை முன்னிட்டு இது ஒழுங்கு செய்யப்பட்டிருந்த்து. 

இவ் வைபவ்வத்தில் அவர் மேலும் தெரிவித்தாவது.  

செழுமையான கலாசாரம் மற்றும் கல்வி ரீதியான உறவுகளின் இரு தசாப்தத்தை கொண்டாடும் முகமாக இலங்கைலுள்ள அமெரிக்க தூதரகம், கண்டி மாநகர சபை மற்றும் கண்டி 'அமெரிக்கன் கோர்னர்' என்பன இணைந்து இதனை கண்டியில் ஏற்பாடு செய்தன. ஆங்கில மொழி பயிற்சி மற்றும் தொழில் முனைவு செயலமர்வுகள் போன்ற இலவச நிகழ்ச்சித்திட்டங்களை மேற்படி ‘அமெரிக்கன் கோனர்’ வழங்கியதன் மூலம் மக்களிடையே பரஸ்பர புரிந்துணர்வை ஊக்குவிக்க முடிந்தது.

 கலாசார பரிமாற்றம், மற்றும் கற்றல்களுக்கான மையங்களாக இந்த அமெரிக்க ஸ்தானங்கள் சேசையாற்றுகின்றன. 20 வருடங்களாக கண்டி அமெரிக்க கோனரானது, அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையில் இணைப்பு பாலமொன்றை நிர்மாணித்து கூட்டாண்மையின் ஒரு மைல் கல்லாக இருந்து வருகிறது.

அது மட்டுமல்லாது அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான வலுவான, நீடித்த உறவையும் நாம் இன்று கொண்டாடுகிறோம், ஆயிரங்கணக்கான இலங்கையர்களை, குறிப்பாக இளைஞர்கள் மற்றும் யுவதிகளை மையமாகக் கொண்டு , இலவச கல்வி, தலைமைத்துவ அபிவிருத்தி மற்றும் ஜனநாயகப் பண்புகள் போன்ற பல பொதுவான விழுமியங்களைக் கொண்ட நிகழ்ச்சித் திட்டங்கள் நடத்துகின்றன. இதன் ஊடாக அவர்களை வலுவூட்ட முடிந்தது. இலங்கை மக்களுடனான இந்த பயணத்தைமேலும் தொடர்வதற்கு நாம் எதிர்பார்க்கிறோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.  

மத்திய மாகாண பிரதி பிரதம செயலாளர் திலீப பியதாச உரையாற்றும் போது தெரிவித்தாவது-

கண்டி மாநகர சபைக்கும் அமெரிக்க தூதரகத்துக்கும் இடையிலான நீடித்த உறவுகள் உண்டு. எமது மாவட்டத்திற்கு இத்தகைய வளங்களை வழங்கியமைக்காக அமெரிக்க தூதரகத்திற்கு நாம் நன்றி தெரிவிக்கிறோம். இந்த உறவை சிறந்த முறையில் எதிர்காலத்திலும் தொடர்வதற்கு எதிர்ப்பார்க்கிறோம் என்றார்.  

அமெரிக்க தூதரகத்தின் பொது அலுவல்கள் அதிகாரி ஹேர்ட்டன் பேக் ரையாற்றும்போது இங்கு தெரிவித்தாவது-

'கண்டியிலுள்ள அமெரிக்க கோர்னர் உட்பட எமது அமெரிக்க ஸ்தானங்களின் வலையமைப்பானது இலங்கை தொடர்பான அமெரிக்காவின் நீடித்த உறுதிப்பாட்டையும் நம்பிக்கையையும் பிரதிபலிக்கிறது, 

'இளைஞர் வலுவூட்டல் மற்றும் கல்வி வளர்ச்சிக்கான தலைமைத்துவ வாய்ப்புகளில் பல தசாப்த காலம் நாம் முதலீடுகளைச் செய்துள்ளளோம். டீ.எஸ் சேனாநாயக்க ஞாபகார்த்த பொது நூலகத்தில் அமைந்துள்ள கண்டி ‘அமெரிக்கன் கோனரானது’, அமெரிக்காவைப் பற்றிய தகவல்கள், கலாசார செயற்பாடுகள், கல்வி ஆலோசனைகள், ஆங்கில மொழிக் கல்வி, முன்னாள் மாணவர் ஈடுபாடுகள் மற்றும் திறன் அபிவிருத்தி போன்ற விடயப்பரப்புகளில் அவதானம் செலுத்தி இலவச நிகழ்ச்சித்திட்டங்களை வழங்குகிறது.

 ஆங்கில மொழி பயிற்சி, இளைஞர் தலைமைத்துவ அபிவிருத்தி மற்றும் பெண்களின் தொழில் முனைவு போன்ற நிகழ்ச் சித்திட்டங்கள் இங்கு இடம் பெறுகின்றன என்றார்.

 

VIDEOS

Recommended