பதுளை கஹட்டருப்ப வீதியில் விபத்து இரு போலீசார் வைத்திய சாலையில் அனுமதி
ராமு தனராஜா
UPDATED: May 13, 2024, 4:18:40 AM
பதுளை கஹட்டருப்ப வீதியில் நேற்று (12) மாலை பேருந்து ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கிராதுருகொட்ட பொலிஸ் நிலையத்தில் இருந்து விஷேட கடமைகளுக்காக கஹட்டருப்ப பொலிஸ் நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த பொச ரஞ்சித் (61199) மற்றும் பொகோ ராஜபக்ஷ (85028) ஆகிய இரு பொலிஸ் அதிகாரிகளே இவ்விபத்தில் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கஹட்டருப்ப பகுதியில் இருந்து பதுளை நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து குறித்த மோட்டார் சைக்கிளில் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ALSO READ | முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஸ்டிப்பு!!
விபத்தின் பின்னர், காயமடைந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் கஹட்டறுப்ப பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைகளின் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு
மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்
கஹட்டருப்ப, டபாகோட் என்ற முகவரியில் வசிக்கும் பேருந்தின்
சாரதி பொலிஸார் வினால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் நேற்று பெய்த கடுமையான மழையில் காரணமாக விபத்து இடம்பெற்ற இடம் வளைவினாலும் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பதுளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த கந்தேவத்த மற்றும் பதுளை பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் புத்திக குணசேகர ஆகியோரின் பணிப்புரைக்கு அமைய கஹட்டருப்ப பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கெமுனு அபேசுந்தர தலைமையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்