• முகப்பு
  • இலங்கை
  • ஜனாதிபதியின் எண்ணக்கருவில் உருவாக்கப்பட்டது தான் இளைஞர் விவசாய தொழில் முனைவோர் கிராமமம்

ஜனாதிபதியின் எண்ணக்கருவில் உருவாக்கப்பட்டது தான் இளைஞர் விவசாய தொழில் முனைவோர் கிராமமம்

எஸ்.எம்.எம்.முர்ஷித்

UPDATED: Jul 17, 2024, 3:43:54 AM

நமது வீட்டில் நமது கிராமத்தில் தங்களுக்குரிய எல்லாப் பொருட்களும் இருக்க வேண்டும் என்ற ஜனாதிபதியின் எண்ணக்கருவில் உருவாக்கப்பட்டது தான் இளைஞர் விவசாய தொழில் முனைவோர் கிராமமாகும் என்று பாராளுமன்ற உறுப்பினரும் ஓட்டமாவடி பிரதேச அபிவிருத்தி குழு தலைவருமான ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீரவின் கருத்திட்டத்திற்கு அமைய இளைஞர் விவசாய தொழில் முனைவோர் கிராமம் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் காகிதநகர் கிராமத்தில் மஜ்மா நகர் கிராத்தில் அங்குரார்ப்பன நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம் பெற்ற போது அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்.

நமது நாடு வறுமையான நாடாகி படுகடன் பட்ட நாடாகி நாம் கடன் கொடுக்க முடியாதவர்களாகவும் நமக்கான பொருட்களை இறக்குமதி செய்யமுடியாதவர்களாகவும் உணவுப் பொருள் எண்ணெய் வகை எரிவாயூ, மின்சாரம் போன்ற பொருட்களுக்கு தட்டுப்பாடான ஒரு நாடாகவும் எமது நாடு தள்ளப்பட்டிருந்தது.

அதனால் இந்த நாட்டின் வரலாற்றிலேயே நாம் காணமுடியாத அசம்பாவிதங்களை நாம் கண்டு கொண்டோம் யுத்தத்தால் பல அசம்பாவிதங்களை கண்டு இருக்கிறோம். சுனாமியால் அசம்பாவிதங்களை கண்டு இருக்கிறோம். கொரோனாவால் அசம்பாவிதங்களை கண்டு இருக்கிறோம். இவைகளையெல்லாம் விட பொருளாதார வீழ்ச்சினால் நாம் கண்ட ஆகப் பெரிய வீழ்ச்சிதான் நமக்கு நடந்த பொருளாதார பிரச்சினையாகும்.

இதிலிருந்து நாடும் நாட்டிலே வாழ்கின்ற எல்லா மக்களும் அறிஞர்கள் கல்வி கற்றவர்கள், அரச உத்தியோகத்தர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லாவகையினரும் ஒரு முடிவுக்கு வந்தார்கள் நமது உணவு நமது கையிலே இருக்க வேண்டும் உலகத்திலே பெரிய சண்டை நடந்தால் எண்ணெய் வராது அரிசி வராது நாட்டிலே அசம்பாவிதம் ஏதும் நடந்தால்கூட நமது வீட்டில் நமது கிராமத்தில் தங்களுக்குறிய எல்லாப் பொருட்களும் இருக்க வேண்டும் என்ற திட்டத்தில்தான் ஜனாதிபதியினால் உருவாக்கப்பட்டதுதான் இளைஞர் விவசாய தொழில் முனைவோர் கிராமமாகும் என்றும் தெரிவித்தார்.

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் ஏ.தாஹிரின் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினரும் ஓட்டமாவடி பிரதேச அபிவிருத்தி குழு தலைவருமான ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ் கலந்து கொண்டதுடன் அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் திருமதி ஜே.ஜே.முரளீதரன், மட்டக்களப்பு மாவட்ட விவசாய பணிப்பாளர் எம்.எப்.ஏ.ஸனீர், பிரதேச செயலக பிரதி திட்ட பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸ், பிரதேச அபிவிருத்தி குழு தலைவரின் பிரதேச அமைப்பாளர்கள் உட்பட பிரதேச முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

இதன் போது முதற்கட்டமாக இருநூறு தென்னங்கன்றுகளும் ஐம்பது முந்திரிகை கன்றுகளும் இருபத்தைந்து ஆடுகளும் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.



 

 

 

 

VIDEOS

Recommended