சுனாமி 20 வருடம் களுத்துறையில் சிறப்பு நிகழ்வுகள்
பேருவளை - பீ.எம் முக்தார்
UPDATED: Dec 27, 2024, 6:14:18 AM
சுனாமி தாக்கத்திற்குப் பிறகு 20 ஆண்டுகள் கடந்ததை நினைவுகூரும் வகையில் களுத்துறை கலமுல்ல பகுதியில் சிறப்பு நிகழ்வு ஒன்று நடைபெற்றது.
இந்த நிகழ்வு பழைய நூல் நிலைய கட்டிடத்தருகே நடைபெற்றது, இதில் மதகுருமார்கள் மற்றும் பகுதிவாசிகள் கலந்து கொண்டனர்.
மாணவர்களின் நாள் முழுதும் இலைகஞ்சி விற்பனை மூலம் நிர்மாணிக்கப்பட்ட இந்த நூல் நிலையம், சுனாமி நேரத்தில் கடும் பாதிப்புக்குள்ளானது.
அதில் இருந்த உயர் மதிப்புடைய நூல்கள் நீரால் அழிவுற்றது குறிப்பிடத்தக்கது.
இதே வேளை களுத்துறை மாவட்ட செயலகத்தில்...
சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு 20 வருடங்கள் பூர்த்தியை முன்னிட்டு களுத்துறை மாவட்ட செயலகத்தில் விஷேட சமய நிகழ்ச்சிகள் இடம் பெற்றது.
இந்த கடற்கோள் அனர்த்தத்தின் போது உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து 2 நிமிட மெளன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
மாவட்ட செயலாளர் ஜனக கே. குணவர்தன தலைமையில் இந்த நிகழ்வு இடம் பெற்றதுடன் மாவட்ட செயலக உயர் அதிகாரிகளும் பங்குபற்றினர்.