பழையபேருந்து நிலையத்தின் பயன்படாத கட்டங்கள் அகற்றப்பட்டது!!
வவுனியா
UPDATED: Oct 2, 2024, 1:49:28 AM
பழையபேருந்து நிலையத்தின் பயன்படாத கட்டங்கள் அகற்றப்பட்டது!! வாகனத்தரிப்பிடம் அமைக்க நடவடிக்கை!
வவுனியா பழைய பேருந்துநிலையப்பகுதியில் அமைந்துள்ள பயன்பாடற்ற கட்டங்கள் நகரசபையால் இடித்து அகற்றப்பட்டதுடன் அந்த இடத்தில் வாகனத்தரிப்பிடம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாக நகரசபை செயலாளர் தெரிவித்தார்.
வவுனியா கண்டிவீதியில் அமைந்துள்ள பழையபேருந்துநிலையம் கடந்த 2017 ஆம் ஆண்டுவரை வவுனியாவின் பிரதான அரச பேருந்து நிலையமாக செயற்ப்பட்டுவந்தது. இந்நிலையில் வவுனியா யாழ்வீதியில் அனைத்து வசதிகளுடனும் கூடிய புதியபேருந்து நிலையம் ஒன்று அமைக்கப்பட்டது.
கடந்த 2017ஆம் ஆண்டு முதல் புதிதாக அமைக்கப்பட்ட பேருந்து நிலையமூடாகவே அரசதனியார் பேருந்துகள் சீரானமுறையில் சேவையினை முன்னெடுத்து வருகின்றது.
இந்நிலையில் பழையபேருந்து நிலையப்பகுதியில் பயன்பாடற்று காணப்பட்ட பழமையான தரிப்பிடக்கட்டங்கள் நகரசபையால் அகற்றப்பட்டுவருகின்றது.அந்த இடத்தில் வாகனத்தரிப்பிடம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாக நகரசபையின் செயலாளர் தெரிவித்துள்ளார்.