• முகப்பு
  • இலங்கை
  • பங்குச்சந்தையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளமை தொடர்பாக ஒரு தெளிவினை நாட்டு மக்களுக்கு வழங்க வேண்டும் - இலங்கை நீதிக்கான மய்யம் வேண்டுகோள்

பங்குச்சந்தையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளமை தொடர்பாக ஒரு தெளிவினை நாட்டு மக்களுக்கு வழங்க வேண்டும் - இலங்கை நீதிக்கான மய்யம் வேண்டுகோள்

எஸ். அஷ்ரப்கான்

UPDATED: May 18, 2024, 3:36:06 AM

பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவது தொடர்பாக ஊடகங்களில் கருத்து தெரிவிப்பதால் இலங்கை பங்குச்சந்தையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாக ஜனாதிபதி குறிப்பிட்ட

பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவது தொடர்பாக ஊடகங்களில் கருத்து தெரிவிப்பதால் இவ்வாறான விவாதங்கள் இலங்கை பங்குச்சந்தையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளமை தொடர்பாக ஒரு தெளிவினை நாட்டு மக்களுக்கு வழங்க வேண்டும் என இலங்கை நீதிக்கான மய்யத்தின் ஸ்தாபக தலைவர் சட்டத்தரணி ஷஃபி எச்.இஸ்மாயில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


நீதிக்கான மய்யத்தின் ஊடக சந்திப்பு சாய்ந்தமருது அலுவலகத்தில்  இடம் பெற்றது. இங்கு நீதிக்கான மையத்தின் பிரதித் தலைவர் யு.கே.எம்.ரிம்ஸானும் கலந்து கொண்டார்.

இங்கு உரையாற்றிய அவர் மேலும் குறிப்பிடும்போது,

பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவது தொடர்பாக ஊடகங்களில் கருத்து தெரிவிப்பதால்பங்குச் சந்தையில் ஒரு குளறுபடியான நிலை தோன்றுவதாகவும்,இந்த தளம்பல் நிலையின் காரணமாக ஒரு குறிப்பிட்ட வர்த்தகர்கள் குழு இலாபமீட்டுவதாகவும் பாரிய குற்றச்சாட்டு ஒன்றினை முன்வைத்திருந்தார்.

 

அவ்வாறு கருத்தாடல்கள் ஊடகங்களில் இடம் பெறுவதால் இலாபம் அடையும் வர்த்தகர்கள் தொடர்பாக வெளிப்படையாக அவர் குறிப்பிடவில்லை. இதில் ஒரு பாரிய சந்தேகம் இருக்கின்றது. ஜனாதிபதி சார்ந்து இருக்கின்ற மொட்டுக்கட்சி உறுப்பினர்களே பாராளுமன்ற தேர்தல் ஜனாதிபதி தேர்தலுக்கு முதல் நடைபெற வேண்டும் என்று ஊடகங்களில் தெரிவித்து வருகின்றார்கள்.

எனவேதான் ஜனாதிபதி குற்றம் சாட்டுவது தான் சார்ந்திருக்கும் மொட்டுக்கட்சி உறுப்பினர்களையா ? அல்லது வேறு கட்சி உறுப்பினர்களையா ? என்ற சந்தேகம் இருக்கின்றது.

இவ்வாறான பொருளாதார நிலைமைகள்தான் இந்த நாடு இன்று வங்குரோத்து நிலையை அடைந்திருக்கின்றது.

இவ்வாறான சுயநலமிக்க வர்த்தகர்களால் இந்த நாடு இன்னும் வங்குரோத்து நிலையை அடையக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் தான் நாம் இந்த வேண்டுகோளை விடுகின்றோம்.


பொருளாதார நிலமை இன்னும் மோசமடைய கூடாது என்கின்ற விடயத்தில் இந்த நாட்டு மக்கள், சிவில் சமூகம் மிகவும் அவதானமாக இருக்கின்றது.

எனவேதான், இந்த இலாபம் அடையும் வர்த்தகர்கள் யார்?

இதில் வெளிப்படையாக ஜனாதிபதி அவர்கள் ஒரு தெளிவினை இந்த நாட்டு மக்களுக்கு வழங்க வேண்டும் என்றுஜனாதிபதி அவர்களிடம் ஒரு பகிரங்கமான வேண்டுகோளை விடுகின்றோம் என்றார்.

 

VIDEOS

Recommended