பாடசாலை மாணவர்களுக்கு போக்குவரத்து பாதுகாப்பு உபகரணங்களை வழங்கி வைத்தார் ஆளுநர்
இர்ஷாத் ரஹ்மதுல்லா
UPDATED: May 13, 2024, 2:15:15 AM
பாடசாலை மாணவர்களுக்கு போக்குவரத்து பாதுகாப்பு உபகரணங்களை வழங்கி வைத்த கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்!
பாடசாலைகளுக்கு முன்பாக பொலிஸாரின் கண்காணிப்புடன் பாடசாலை நேரத்தில் மாணவர்கள் வீதி விதிமுறைகளை பேணுவதற்காக பாடசாலை மாணவர்களுக்கு போக்குவரத்து பாதுகாப்பு உபகரணங்களை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் வழங்கி வைத்தார்.
மேலும் மாணவர்களின் பாதுகாப்பு கருதி 30 நாட்களுக்குள் அனைத்து பாடசாலைகளின் முன்பாகவும் வேக தடைகளை உடனடியாக அமைக்க அனைத்து வீதி அதிகாரசபைகளுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார்.