நல்லிணக்க ஜனாதிபதி செயலியின் விஷேட கலந்துரையாடல்

பாரூக் பதீன் - புத்தளம்

UPDATED: May 14, 2024, 11:48:59 AM

புத்தளம் மாவட்டத்தில் மூவின சமுகங்களும் எதிர் நோக்கியவை மற்றும் எதிர் நோக்கும் கல்வி சுகாதாரம் உட்கட்டமைப்பு,காணி, இழப்பீடு ,ஏனைய அபிவிருத்திகளின் போது எதிர் நோக்கும் சவால்கள், பிரச்சினைகள் பற்றிய ஜனாதிபதி நல்லிணக்கப் பொறிமுறை ஆணைக்குழுவுக்கு ஆலோசனைகளை சமர்ப்பித்தல் மற்றும் பெற்றுக்கொள்வது சம்பந்தமான கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தின் ஏற்பாட்டில் முதல் நாள் கற்பிட்டி பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது.

இரண்டாம் நாள் புத்தளம் பிரதேச செயலகத்திலும் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

 இக்கலந்துரையாடலில் ஜனாதிபதி செயலணியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரஞ்சித் அழகக் கோன், இணைப்பாளர் கொடித்துவக்கு , பேராசிரியர் தங்கராசா ,, புத்தளம் பிரதேச செயலாளர் ,உலமாக்கள், கல்விமான்கள், அதிபர் ஆசிரியர்கள் அரசியல் பிரமுகர்கள், பள்ளிவாசல்களின் நிருவாகிகள்,பெண் அமைப்புக்களின் பிரதிநிதிகள்,சமுக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

VIDEOS

Recommended