சஜித் பிரேமதாச தலைமையிலான அரசாங்கமே அமையும் - சசிகுமார் தெரிவிப்பு
இர்ஷாத் றஹ்மத்துல்லா
UPDATED: Nov 4, 2024, 4:10:44 AM
ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட வேட்பாளர் எஸ். சசிகுமாரின் ஏட்பாட்டில் வத்தல செப் மண்டபத்தில் தேர்தல் பிரசார கூட்டம் நேற்று இடம் பெற்றது.
இதன் போது வேட்பாளர்களான நியோமால் பெரேரா, மொஹமட் பாய்ஸ் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கலந்து கொண்ட மேற்படி கூட்டத்தில் ,வேட்பாளர் சசி குமார் உரையாற்றினார்.
அவர் அங்கு பேசுகையில் -
தற்றுபோதைய அரசியலில் புதியவர்கள் வந்து வாக்குகேட்கின்றனர். இவர்கள் வெற்றி பெருவதற்கு அல்ல வாக்குகளை பிரித்து எமது பிரதி நிதித்துவத்தை இல்லாமல் ஆக்குவதுக்கு என்பதை மக்களுக்கு புரியட்ச் செய்விய்ப்பது எமது பொறுப்பு.
இன்றைய இந்த கூட்டமானது ஒரு பொதுகூட்டமல்ல எமது பிறதேசத்தில் உள்ள அமைப்புக்கள், கழகங்கள், மற்றும் நிறுவன ரீதியான கட்டமைப்பினருடனான ஒரு சந்திப்பாகவே ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது.
எவ்வாறு மக்கள் பிரதிநிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நகர பிரதேச சபைகளின் பிரதிநிதிகள் காணப்படுகின்றார்களோ அது போன்று இன்று இங்கு வருகை தந்திருக்கின்ற நீங்கள் என்பதை நாங்கள் ஏற்றுக் கொண்டதன் காரணமாகவே இந்த பொறுப்பினை உங்களிடம் ஒப்படைக்கின்றோம்.
2024 பாராளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை என்று எனது கட்சியின் தலைவர் மனோ கணேசன் அவர்களிடம் தெரிவித்தேன். கடந்த இரு தேர்தல்களிலும் மக்கள் எமக்கு அதிகமான வாக்களித்த போதும் நாம் பாராளுமன்ற பிரதிநிதியாக வருவதற்கு போதுமான வாக்குகள் எம்மிடம் இல்லை என்பதை.
ஆனால் எனது தலைவர் அவர்கள் தைரியமாகும் வரை நீங்கள் களம் இறங்குங்கள் வெற்றி எங்களின் பக்கம் இருக்கிறது என்று கூறினார். அதற்கான வியூகத்தையும் வகுப்பதற்கான ஏற்பாடுகளை அவர் நமக்கு செய்து கொடுத்தார் என்பதை இங்கு நாம் தெரிவிக்க விரும்புகின்றேன்.
குறிப்பாக எமது கம்பஹா மாவட்டத்தில் வாழும் இஸ்லாமிய சகோதரர்கள் எம்முடன் கைகோர்த்து இந்த வெற்றியின் பங்காளர்களாக அவர்களின் வேட்பாளரான பாயிஸ் அவர்களையும் ஒன்று சேர்த்து இந்தப் பயணத்தை நாங்கள் முன் னெடுக்கின்றோம்.
எங்களை நீங்கள் தெரிவு செய்கின்ற போது எமது இந்த பிரதேசத்தின் அபிவிருத்தியும் சிறுபான்மை மக்களது பிரச்சினைகளுக்கான தீர்வும் உள்ளது என்பதையும் நாம் உங்களுக்கு கூறிக் கொள்ள விரும்புகின்றேன் என்றும் அவர் இதன் போது கூறினார்.